நம்மில் பலருக்கு தெரிய வாய்ப்பில்லாத மறுபக்கம்: நீங்களும் அதிர்ச்சியடையக்கூடும்!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

தமிழ் சினிமா உலகத்தையே புரட்டிப் போட்டார் சுசித்ரா.

பன்முகத் திறமை வாய்ந்த சுசித்ராவின் ட்விட்டர் சமூக வலைத்தளத்தில் வெளியிடப்பட்ட சில ஆபாசப் படங்களும், வீடியோ துண்டுக்காட்சிகளும் கோடம்பாக்கத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருந்தன.

அதிலும் குறிப்பாக ஓர் இளம் முன்னணி நடிகரும், இளம் இசையமைப்பாளரும் ஒரு பார்ட்டியில் தன்னிடம் பாலியல்ரீதியாக அத்துமீறிவிட்டதாக அவர் அறிவித்தது கடுமையான அதிர்ச்சியை அனைவருக்கும் ஏற்படுத்தியது. யாரோ தன்னுடைய ட்விட்டர் அக்கவுண்டை ‘ஹாக்கிங்’ செய்து இதுபோன்ற படங்களை வெளியிடுகிறார்கள் என்று அவர் விளக்கம் கூறியிருக்கிறார். அவருடைய மனநிலை பாதிக்கப்பட்டிருக்கிறது, அதனால்தான் இப்படி அராஜகம் செய்கிறார் என்றும் சிலர் குற்றம் சாட்டியிருக்கிறார்கள்.

சுசித்ராவின் ட்விட்டர் அக்கவுண்ட் உடனடியாக முடக்கப்பட்டு விட்டாலும், அதில் வெளியிடப்பட்ட படங்களும் வீடியோ காட்சிகளும் பல்லாயிரம் பேரால் டவுன்லோடு செய்யப்பட்டு வாட்ஸப் மூலமாக பரபரப்பாக மக்களிடையே விநியோகிக்கப்பட்டு வந்தது.

சுசித்ராவின் பெயரில் சில சைபர்கிரைம் குற்றவாளிகள் புதிது புதிதாக ட்விட்டர் அக்கவுண்ட் துவக்கி, மேலும் பல ஆபாசங்களை அரங்கேற்றி வருகிறார்கள். அந்தப் படங்களில் இடம்பெற்றிருப்பதாக கூறப்படும் நடிகர் நடிகைகளும் பலரும் ‘அதில் இருப்பது தாங்கள் அல்ல’ என்று அவசர அவசரமாக அலறிக்கொண்டிருக்கிறார்கள்.இந்த விஷயமாக பேசிக்கொண்டிருந்தபோது தொண்ணூறுகளில் வெற்றிப்பட இயக்குநராக வலம் வந்த ஒருவர் பெயர் குறிப்பிடாமல் சில விவரங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

இரண்டாயிரம் வரை தமிழ் சினிமா ஓரளவுக்கு ஒழுங்காகத்தான் நடந்து கொண்டிருந்தது. அதன் பிறகே பாலிவுட்டில் இருப்பதைப் போன்ற ‘பார்ட்டி கல்ச்சர்’ இங்கே பிரபலமாகத் தொடங்கியது. குறிப்பாக பாலிவுட்டுக்கு போய் படம் செய்த நம்மாட்கள், அங்கிருந்த இந்த உல்லாசமான கலாச்சாரத்தில் சுகம் கண்டுவிட்டு, இங்கே வந்து அறிமுகப்படுத்தினார்கள். முன்பெல்லாம் ஒரு படம் தொடர்பாக பூஜை, ஆடியோ வெளியீடு, ரிலீஸ், வெற்றி விழா என்று மட்டுமே நிகழ்ச்சிகள் நடக்கும். திரையுலக பிரமுகர்கள் யாருக்காவது பிறந்தநாள் வந்தால் கூட படப்பிடிப்புக் குழுவினர், சம்பந்தப்பட்ட படப்பிடிப்பிலேயே அதைக் கொண்டாடுவார்கள். ஆனால், தற்போதோ எல்லாவற்றுக்கும் பார்ட்டிதான். நட்சத்திர ஓட்டலில் ஆண், பெண் வித்தியாசமில்லாமல் மது அருந்திவிட்டு முழு போதையில் கொண்டாடுகிறார்கள். இதுபோன்ற பார்ட்டிகளில் சில நேரங்களில் வாய்ச்சண்டை வலுத்து அடிதடியும் ஆனதுண்டு.

மதுவைத் தாண்டி வேறு சில போதை வஸ்துகளும் இப்போது பார்ட்டிகளில் புழங்குகிறது. நிதானமில்லாத நிலையில் தேவையில்லாத வம்புப் பேச்சுகள் வளர்கின்றன. குறிப்பாக சினிமாவின் ஒட்டுண்ணிகளாக வாழும் சிலர், தங்கள் செல்வாக்கை நிலைநிறுத்திக் கொள்ள அடிக்கடி கொடுக்கும் பிரைவேட் பார்ட்டிகளில் நடக்கும் நிகழ்வுகளும், பேசப்படும் பேச்சுகளும் மிகவும் மோசமானது. சினிமாவுக்கு நேரடியாக தொடர்பில்லாத பலரையும் இதுபோன்ற பார்ட்டிகளில் காணமுடிகிறது. பல்வேறு பிரச்னைகளுக்கு அவர்களே காரணமும் ஆகிறார்கள். குறிப்பாக பார்ட்டிக்கு ஸ்டார்களோடு ஓசியில் குடிக்க வரும் அல்லக்கைகள் செய்யும் அராஜகங்கள் எல்லாம் அவ்வளவு ஆபாசமானவை.

முன்பெல்லாம் இரண்டு சினிமாக்காரர்கள் சந்தித்தால் சினிமா தொடர்பாகத்தான் பெரும்பாலும் பேசுவார்கள்.

அது இண்டஸ்ட்ரியின் வளர்ச்சிக்கு உதவக்கூடியதாகவும் இருக்கும். இப்போதோ பார்ட்டிகளில் பேசப்படுபவை எல்லாமே தனிமனிதர்கள் சார்ந்த விஷயங்கள்தான். பார்ட்டிகளில் இடம்பெறும் நடனம், கலந்துகொண்ட நடிகைகளிடம் இரட்டை அர்த்தமாகப் பேசுவது மற்றும் பாலியல் சீண்டல் போன்றவைகளால் அடிக்கடி பிரச்னைகள் ஏற்படுகின்றன. அவற்றில் ஓரிரண்டு வெளிவந்தாலும், பல விஷயங்கள் ‘இண்டஸ்ட்ரி சீக்ரெட்’ ஆக பொத்திப் பொத்தி பாதுகாக்கப்படுகின்றன. சோனா போன்ற ஓரிருவர்தான் இதுவரை பிரைவேட் பார்ட்டிகளில் நடக்கும் அசிங்கங்களை அம்பலப்படுத்தி இருக்கிறார்கள்.

இப்போது உள்ளூர் பார்ட்டி என்பதைத் தாண்டி வெளிநாடு களில் பார்ட்டி கொண்டாடும் கலாச்சாரமும் அதிகரித்திருக்கிறது. குறிப்பாக தாய்லாந்துக்கு கும்பலாகப் போகிறார்கள். பாங்காக் எப்படிப்பட்ட நகரம், அங்கே என்னவெல்லாம் நடக்கக்கூடும் என்பதையெல்லாம் உங்கள் யூகத்துக்கே விட்டுவிடுகிறேன். இதுபோன்ற பார்ட்டிகளில் செல்போனில் எடுக்கப்படும் சில வீடியோக்களும் படங்களும் பிளாக்மெயில் செய்யவும், சக போட்டியாளரை அச்சுறுத்தவும், அவரது இமேஜை வீழ்த்தவும்கூட பயன்படுகின்றன.இவர்கள் தங்களை தாங்களே அழித்துக் கொள்ளவில்லை. கூடவே எண்பத்தைந்து வயது ஆலமரமான தமிழ் சினிமாவையும் சேர்த்தே அழித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று வேதனையோடு பேசியுள்ளார் அந்த இயக்குநர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*