
நடிகர் தனுஷ் யாருடைய மகன் என்ற சர்ச்சை கடந்த சில நாட்களாக நீடித்து வருகிறது. நடிகர் தனுஷ் எங்களுடைய மகன் என மேலூரை சேர்ந்த கதிரேசன், மீனாள் தம்பதியினர் கூறி பரபரப்பை ஏற்படுத்தினர். இதற்காக அவர்கள் நீதிமன்றத்துக்கே சென்றுள்ளனர்.
தனுஷ் எங்களுடைய மகன் என்பதை நிரூபிக்க மரபணுசோதனை செய்யவும் நாங்கள் தயார் என கூறுகின்றனர் அந்த திடீர் பெற்றோர்கள். இந்நிலையில் நடிகர் தனுஷ் நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்கவும் அவருக்கு சம்மன் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தனுஷ் என் மகன் அல்ல என வழக்கு தொடரப்பட்டுள்ள செய்தி அறிந்து வருத்தமாக உள்ளது என அவரது தந்தை கஸ்தூரி ராஜா கூறியுள்ளார். நாட்டில் எத்தனையோ பிரச்சனைகள் உள்ளன. நீதித்துறையின் பொன்னான நேரம் இது போன்ற பொய் வழக்குகளால் வீணடிக்கப்படுகிறதே என்று வருத்தமாக உள்ளது.
கடந்த 40 ஆண்டுகளாக பத்திரிகையாளர்கள் மற்றும் தன்னுடைய நண்பர்களுக்கு நன்கு தெரியும். எனது மகன் தனுஷை சிறு வயதில் இருந்தே அனைவருக்கும் தெரியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.