தற்கொலை செய்து கொள்வதற்கு காதலியுடன் பதுங்கு குழியில் இருந்த ஹிட்லர்!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

உலக சர்வாதிகாரியனான ஹிட்லர் தற்கொலை செய்து கொள்வதற்கு பதுங்கு குழியில் இருந்து எடுக்கப்பட்ட அவரது புகைப்படங்கள் சுமார் 41,000 அமெரிக்க டொலர்களுக்கு ஏலத்தில் விற்கப்பட்டுள்ளன.

ஹிட்லர் கடந்த 1945 ஆம் ஆண்டு ஜேர்மனியின் பெர்லின் நகரத்தில் உள்ள பதுங்கு குழியில் தனது கடைசி காலத்தை கழித்து வந்தார். ஹிட்லர், தனது காதலி ஈவா பிரவுனுடன் 1945-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தின் இறுதி வாரம் வரை அங்கு வாழ்ந்தார்.

நீண்ட கால காதலியான ஈவா பிரவுனை ஹிட்லர் அங்கு தான் திருமணம் செய்து கொண்டார். நீண்ட கால காதலியான ஈவா பிரவுன் ஹிட்லரின் மனைவியாக சுமார் 40 மணி நேரத்துக்கும் குறைவாகவே வாழ்ந்தார் என்று கூறப்படுகிறது.

அந்த காலக்கட்டத்தில் ஜேர்மனியின் பெர்லின் நகரை ரஷ்ய படைகள் சுற்றி வளைத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஹிட்லர் இவர்களிடம் சிக்கி இறப்பதற்கு தற்கொலை செய்து கொள்வதே மேல் என்று முடிவு செய்துள்ளார்.

அதைத் தன் மனைவியிடமும் தெரிவித்துள்ளார். ஈவாவும், ஹிட்லருடன் தற்கொலை செய்து கொள்வதற்கு முடிவு செய்துள்ளார். அதன் பின் இருவரும் அந்த பதுங்கு குழியில் தற்கொலை செய்து கொண்டனர்.

அந்த பதுங்கு குழியில் இருந்து எடுக்கப்பட்ட்ட அவரது புகைப்படங்கள் தற்போது ஏலம் விடப்பட்டுள்ளன. அதில், ஹிட்லரின் புகைப்படங்கள் சுமார் 41,000 அமெரிக்க டொலர்களுக்கு விற்கப்பட்டுள்ளன.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*