சர்க்கரை நோயாளிகள் உண்ணவேண்டிய உணவுகள்!

பிறப்பு : - இறப்பு :

உலகில் பெரும்பாலானோர்கள் பாதிக்கப்பட்டு இருப்பது சர்க்கரை நோயினால் தான். முன்னர் 50 வயதிற்கு மேற்பட்டோர்க்கு வந்த சர்க்கரை நோய் தற்போது பிறக்கும் குழந்தைக்கும் கூட வருகிறது.

சிறுக சிறுக பாதிப்பினை உண்டாக்கும் நோயினை கவனித்து முறையாக சிகிச்சை எடுத்து கொள்ளாவிட்டால் உயிரை கூட பறித்து விடும்.

உடலில் இன்சுலின் சுரக்காவிட்டாலோ அல்லது இன்சுலின் சுரப்பு போதுமானதாக இல்லாவிட்டால் சர்க்கரை நோய் ஏற்படுகிறது.

சர்க்கரை நோயின் அறிகுறிகள்

அதீத தாகம், அடிக்கடி சிறுநீர் கழித்தல், மங்கலான பார்வை, திடீரென உடல் எடை குறைதல் போன்றவை இருந்தால் சர்க்கரை நோய் இருப்பதற்கான அறிகுறிகள் ஆகும்.

சரியான நேரத்தில் அதிகமான அளவு உணவு எடுத்து கொண்டாலும் பசி எடுப்பது போன்ற உணர்வு இருந்தால் அதுவும் சர்க்கரை நோய்க்கான அறிகுறியாகும்.

சர்க்கரை நோயாளிகளுக்கான உணவுகள்
தானிய வகைகள்

கோதுமை, கேழ்வரகு போன்றவற்றில் அதிகளவில் மாவுச்சத்துள்ளதால் அதிகமாக எடுத்து கொள்ளலாம்.

அரிசியில் கார்போஹைட்ரேட், நார்ச்சத்து அதிகமாக உள்ளதால் தவிடு நீக்கப்படாத கைக்குத்தல் அரிசியினை எடுத்து கொள்ளலாம்.

பருப்பு வகைகள்

உளுந்தம் பருப்பு, கடலைப்பருப்பு, மைசூர் பருப்பு போன்றவற்றில் புரோட்டீன் அதிகமாக உள்ளதால் இதை சேர்த்து கொள்ளலாம். முளைக்கட்டிய தானிய வகைகளில் விட்டமின் பி மற்றும் சி சத்துகள் உள்ளது.

காய்கறிகள்

சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினமும் குறைந்தபட்சம் 400 கிராம் காய்கறிகளை எடுத்து கொள்ளலாம். காய்கறிகளை சுத்தம் செய்து பச்சையாக உண்ணலாம். காய்கறிகள் அதிகமாக விட்டமின்கள், கால்சியம், போலிக் அமிலம் உள்ளது.

வாழைப்பூ, வாழைத்தண்டு, பீர்க்கங்காய், பீன்ஸ், புடங்காய், கத்தரிக்காய், வெண்டைகாய், முட்டைகோஸ், வெள்ளரிக்காய், பூசணிகாய், முருங்கைகாய், பாகற்காய், சுரைக்காய், வெங்காயம், பூண்டு, பப்பாளிக்காய் போன்றவற்றினை சேர்த்து கொள்ளலாம். கீரை வகைகளையும் சேர்த்து கொள்ளலாம்.

காரட், பீட்ரூட், பட்டாணி ஆகியவற்றினை குறைவாக எடுத்து கொள்ளவேண்டும்.

பழங்கள்

ஆப்பிள், ஆரஞ்சு, சாத்துகுடி, கொய்யா, நாவல்பழம்,பப்பாளி, பேரிக்காய் போன்றவற்றை குறைவாக சாப்பிட வேண்டும். பழங்களை ஜீஸாக குடிக்காமல் அப்படியே சாப்பிடலாம். கிவி பழம், தர்பூசணி ஆகியவற்றினை சேர்த்து கொள்ளலாம்.

அசைவ உணவு

முட்டையின் மஞ்சள் கருவினை நீக்கி சாப்பிடலாம். ஒமேகா அதிகமுள்ளதால் 100 முதல் 200 கிராம் வரை வாரம் இருமுறை சாப்பிடலாம்.

எண்ணெய் வகைகள்

உணவில் அதிக அளவில் கலோரிகளை அதிகரிப்பது சமையல் எண்ணெய்தான். நல்லெண்ணெய், கடுகு எண்ணெய், தவிடு எண்ணெய், ஆலிவ் ஆயில் போன்றவற்றினை மிக குறைவாக பயன்படுத்த வேண்டும்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends


Submit