இத்தனை அடி நீள கூந்தலா? வியக்க வைக்கும் இளம்பெண்-(Video)

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

hair

ரஷ்ய இளம்பெண் ஒருவர் தமது கூந்தலை 7.5 அடி நீளத்திற்கு வளர்த்து பராமரித்து வருவது அப்பகுதி மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

ரஷ்யாவின் இளம்பெண் ஒருவர் தமது கூந்தல் மீது கொண்ட அக்கறையால் கடந்த 20 ஆண்டுகளாக கத்தரி படாமலே வளர்த்து வந்துள்ளார்.

தற்போது லத்வியா பகுதியில் கணவருடன் குடியிருந்துவரும் 27 வயதான Brunette Aliia Nasyrova என்பவரின் கூந்தலின் நீளம் 7.5 அடி என தெரிவித்துள்ளார்.

2 கிலோ எடை கொண்ட இந்த கூந்தலை சீவி பராமரிக்க தினசரி ஒரு மணி நேரம் ஒதுக்குவதாக கூறும் அவர், மாதம் ஒருமுறை தனது கூந்தலின் நுனிகளை கத்தரித்து பராமரிப்பதாக தெரிவித்துள்ளார்.

ஆலியாவின் கூந்தல் தங்களது குடும்பத்தில் ஒரு உறுப்பினர் என கூறும் அவரது கணவர் ஈவான், படுக்கையில் கூட தேவைக்கும் அதிகமான இடத்தை விட்டு அக்கறையுடன் பராமரித்து வருவதாக தெரிவித்துள்ளார்.

2 கிலோ அளவுக்கு கூந்தல் இருப்பதால் தமது கழுத்து பகுதியில் தொடர்ந்து வலி இருப்பதாக ஆலியா தெரிவித்துள்ளார். ஆனால் அந்த வலி தமக்கு பெரிதாக படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சிறு வயது முதலே நீளமான கூந்தல் வளர்ப்பதில் அதிக நாட்டம் இருந்ததாக கூறும் ஆலியா, கூந்தல் நீளமாக கொண்ட கதாநாயகிகள் மீது தமக்கு எப்போதும் ஆர்வம் உண்டு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit