கலர் சாயங்களுக்குள் மறைந்திருக்கும் காம வெறியர்கள்!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

இந்தியாவில் கொண்டாடப்படும் முக்கியமான பண்டிகைகளில் ஹோலி பண்டிகையும் ஒன்றாகும்.

வடமாநிலங்களில் குளிர்காலம் முடிந்து கோடை காலத்தை அதாவது வசந்தகாலத்தை வரவேற்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் இந்த ஹோலி பண்டிகை கொண்டாடப்படுகிறது.

அசுரர்களின் தலைவரான இரணியன் தன்மகன் பிரகலாதனை கொல்வதற்காக தனது சகோதரி ஹோலிகாவின் மடியில் அமரவைத்து தீ மூட்டச் செய்தார்.

ஆனால் விஷ்ணுவின் அருளால் பிரகலாதன் உயிருடன் மீண்டுவந்தான். ஹோலிகா தீயில் மாண்டாள். தர்மம் வென்றது என்பதை வெளிக்காட்டுவதற்காக இந்த ஹோலி பண்டிகை கொண்டாடப்படுகிறது என்று புராணக்கதைகளில் கூறப்படுகிறது.

வட இந்தியாவில் சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் என அனைவரையும் குதூகலத்தில் ஆழ்த்தும் பண்டிகை ஹோலி ஆகும்.

வெள்ளை நிற ஆடைகளை அணிந்துகொண்டு, பல்வேறு வண்ணங்கள் நிறைந்த பொடிகள் மற்றும் வண்ண சாயங்களை ஒருவர் மீது தெளித்து அன்பினை பரிமாறிக்கொள்வார்கள்.

மேலும், வீடுகளிலும் பல்வேறு வகையான உணவுகளை சமைத்து உற்றார் உறவினர்களோடு சேர்ந்து உண்டு மகிழ்வார்கள். இந்தியாவில் பொங்கல், தீபாவளி, ஓணம், யுகாதி என பல்வேறு பண்டிகைகள் உற்றார் உறவினர்களோடு சேர்ந்து கொண்டாடப்பட்டு வந்தாலும், ஹோலி பண்டிகை என்பது இந்த பண்டிகைகளிலிருந்து சற்று மாறுபட்டு காணப்படுகிறது.

கலாசாரத்தின் பிறப்பிடமாக திகழும் இந்தியாவில் கலர் சாயங்களை முகங்களிலும், உடல்களிலும் ஒருவர் மீது ஒருவர் தடவும்போது, அது உறவினர்கள் என்றால் அந்த இடத்தில் குதூகலம் மட்டும் நிரம்பியிருக்கும்.

ஆனால், இதுவே வீதிகளில் இறங்கி ஆண் பெண் பேதமின்றி சாயங்களை உடல்களில் தடவிக்கொள்ளும்போது அங்கு சிறு சிறு சங்கடங்களே நிகழும். சாயங்களை பூசுபவர், பூசிக்கொள்பவர்கள் ஆகிய இருவரது மனதிலும் எவ்வித சஞ்சலங்களும் எழாத வரைக்கும் அங்கு அன்பு, சந்தோஷம் ஆகிய இரண்டுமே நிலைத்திருக்குமே தவிர தவறான வேறு ஒரு உறவு அங்கு வந்துவிடாது.

வீதிகளில் இந்த பண்டிகைளை கொண்டாடும்போது, நம் மீது கலர் சாயங்களை பூசுபவர்களை தடுக்க இயலாது. அப்படியில்லையெனில் வீதிக்கு வராமல் வீட்டுக்குள் கதவை சாத்திக்கொண்டு இந்த பண்டிகையை கொண்டாடலாம்.

அன்பாக ஒருவர் மீது ஒருவர் பூசிக்கொள்ளும் இந்த கலர் சாயங்களுக்குள் சில காம சாயங்களும் மறைந்திருக்கின்றன. இதனை கண்டுகொண்டு ஒதுங்கிவிடுபவர்கள் சிலர், கண்டுகொள்ளாமல் களத்தில் இறங்கி கொண்டாடுபவர் பலர்.

இந்த பண்டிகையை விபரீதமான எண்ணம் கொண்ட ஆண்களும் வேறு சில காரணங்களுக்காக பயன்படுத்திக்கொள்கின்றர். கலர் சாயங்களை பூசுகிறோம் என்ற பெயரில், பெண்களின் அங்கங்களை துளைத்தெடுக்கிறார்கள்.

கும்பலமாக ஒன்று சேர்ந்து, வீதிகளில் பெண்கள் கூட்டம் தென்பட்டால் போதும் அதற்குள் புகுந்த தங்கள் சேட்டைகளை நிகழ்த்திவிட்டு, அடுத்த பெண்கள் கூட்டத்தை நோக்கி படையெடுப்பதே இவர்கள் போன்றவர்களின் வேலை.

சந்தோஷமாக கொண்டாடப்பட வேண்டிய பண்டிகையை சாக்கடையாக மாற்றி, இடையூறு விளைவிக்கும் செயல்களில் ஈடுபடுகின்றனர். சொல்லப்போனால், இந்த ஹோலி பண்டிகை சில நேரங்களில் பலாத்கார பண்டிகையாகவும் மாறிவிடுகிறது.

இதுபோன்ற சம்பவங்களால் பல்வேறு பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். ஒரு சிலர் அந்த இடத்திலேயே இதுபோன்ற வெறியர்களுக்கு தண்டனை வழங்கிவிடுகின்றனர்.

பல பெண்கள் அந்த தொடுதலின் அர்த்தம் கூட தெரியாமல் விழித்துக்கொண்டிருக்கையிலேயே கயவர்கள் தங்கள் காரியத்தை நிகழ்த்திவிட்டு கடந்து சென்றுவிடுகிறார்கள்.

இதுபோன்ற, சம்பவங்கள் குறித்து புகார் அளித்தாலும் பண்டிகை என்று வந்தால் கேளிக்கூத்துகள் நடக்கத்தான் செய்யும், அப்படி உங்களுக்கு பிடிக்கவில்லையென்றால் நீங்கள் எதற்காக இந்த பண்டிகையை கொண்டாடுகிறீர்கள் என்ற கேள்விகளே காதுகளை துளைக்கின்றன.

ஹோலி என்பது வட இந்தியர்களின் உற்சாகமான கொண்டாட்டம் தான் என்றாலும், இதுபோன்ற சம்பவங்களுக்கு எதிராக பெண்கள் தொடர்ந்து குரல் கொடுத்தால், கலர் சாயங்கள் பளிச்சிட்டு, காம வெறியர்கள் மறைவார்கள்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*