சென்சார் போர்டு உறுப்பினரான கவர்ச்சி நடிகை

பிறப்பு : - இறப்பு :

கஜேந்திரா, சாரி எனக்கு கல்யாணம் ஆயிடுச்சி, குஸ்தி, திண்டுக்கல் சாரதி போன்ற படங்களில் நடித்திருப்பவர் புளோரா சைனி. தெலுங்கு, இந்தி படங்களிலும் இவர் நடித்திருக்கிறார். ஆஷா சைனி, மயூரி, லக்ஸ் என ஒவ்வொரு மொழியிலும் ஒவ்வொரு பெயரை மாற்றிக்கொண்டு நடித்து வருகிறார்.

கவர்ச்சி வலைவிரித்து இளவட்டங்களை வளைத்துப்போடும் இவரை யூத் கூட்டம் லக்ஸ் பாப்பா என செல்லமாக அழைக்கிறார்கள். குத்தாட்டம் ஆடுவதற்காக இவரை கோலிவுட், டோலிவுட் இயக்குனர்கள் வலைவீசி தேடிக்கொண்டிருக்கிறார்கள். இவரோ சத்தமில்லாமல் மும்பையில் சென்சார் போர்டில் உறுப்பினராக நியமனமாகி பாலிவுட் படங்களுக்கு கத்தரி போட்டுக்கொண்டிருக்கிறார். விஷயத்தை கேள்விப்பட்டவர்கள் கவர்ச்சி நடிகையான இவர் சென்சாரில் எப்படி இடம்பிடித்தார் என்கிறார்கள்.

இவருக்கு என்ன சினிமா தெரியும் என்றும் புலம்புகிறார்கள். பிரபல பாலிவுட் ஹீரோவின் சிபாரிசால் இவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்ததாக சொல்லப்படுகிறது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit