
பள்ளியில் ஆசிரியர்கள் நடத்தும் பாடங்களை ஒழுங்கான முறையில் கவனித்து அதனை தேர்வுகளில் சமர்ப்பித்தால் போதும் அந்த மாணவன் தேர்வில் வெற்றி பெற்றுவிடுவான்.
கணிதம், ஆங்கிலம், விலங்கியல், தாவரவியல், பொருளியல் என அத்தனை பாடங்களும் மாணவர்களின் மூளைக்குள் புகுந்து அறிவு என்ற ஒரு கட்டிடத்தையே கட்டிவிடுகின்றன.
ஒரு மாணவன் நல்ல அறிவுள்ள மாணவனாக திகழ்வதற்கு, ஆசிரியர்களின் வழிகாட்டுதல் மிக முக்கியமான ஒன்று.
மிகவும் கஷ்டமான ஒரு பாடத்தை கூட, மாணவர்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் பாடம் எடுப்பது ஆசிரியர்களின் திறமை.
ஆசிரியர்கள் பாடம் எடுக்கும் விதம் சரியில்லை எனில், ஒரு மாணவனுக்கு பிடித்த பாடம் கூட படிப்பதற்கு பிடிக்காமல் போய்விடும். அந்த வகுப்பில் இருப்பதையே எரிச்சலாக நினைத்து வெளியேறிவிடுவான்.
அதுவே, அந்த ஆசிரியர் பாடம் எடுக்கும் விதம் அருமையாகவும், அந்த ஆசிரியரையும் பிடித்துபோய்விட்டால் அந்த பாடத்திற்கு இவன் அடிமையாகிவிடுவான்.
பள்ளியில் நமக்கு பிடித்த ஆசிரியர் எது சொன்னாலும் அதனை அப்படியே பின்பற்றும் பழக்கம் கொண்டிருப்போம். அறிவியல் ஆசிரியரை நமக்கு பிடித்திருந்தால் அவர் பாடம் நடத்தும்போது ஒழுங்காக கவனிப்பது, அவர் கொடுக்கும் வீட்டுப்பாடங்களை உடனே முடித்துவிடுவது என பம்பரமாக சுழல்வோம்.
மற்ற பாடங்களை விட அந்த பாடத்தில் மட்டும் அதிக அக்கறை எடுப்போம், மற்ற வகுப்புகளை புறக்கணித்தாலும் அறிவியல் வகுப்பிற்கு மட்டும் முதல் ஆளாக வருகை தருவது என உற்சாகமாக செயல்படுவோம்.
இப்படிப்பட்ட உற்சாகம் நமக்கு கிடைப்பதற்கு உற்சாக டானிக் எங்கிருந்து வருகிறது என்றால் அது அந்த ஆசிரியரிடம் இருந்தே.
பாடம் நடத்தும் விதம் நமக்கு பிடித்துப்போவது, இதனால் அந்த ஆசிரியர் மீது ஏற்படும் ஒருவித மரியாதை. பாடம் நடத்தும்போது ஆசிரியரை ரசித்து பார்ப்பது, அவர் வகுப்பறைக்குள் நுழையும்வரை நண்பர்களோடு சேர்ந்து வகுப்பறை வாசலில் காத்திருப்பது, நமக்கு பிடித்த ஆசிரியர் நடந்துசெல்லும்போது நண்பர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து நம்முடைய பெயரை சொல்லி அழைப்பது, ஆசிரியர் அணியும் ஆடைகளை குறிப்பெடுப்பது, அவரின் சிரிப்பை ரசிப்பது என இத்தனை கொண்டாட்டங்களும் பள்ளிக்காலங்களில் கண்டிப்பாக நடைபெறும்.
இதற்கு பெயர் Crush. யாராவது ஒருவர் மீது நமக்கு ஏற்படும் ஒருவித ஈர்ப்பு. அதுவும் பள்ளிக்காலங்களில் ஆசிரியர்கள் மீது மாணவர்களுக்கு கண்டிப்பாக இந்த Crush ஏற்படும்.
நாள் முழுவதும் சோம்பலாக இருக்கும் மாணவர்கள், நமக்கு பிடித்த ஆசிரியர் உள்ளே வந்தால் போதும் Full Energy உடம்பில் வந்து ஒட்டிக்கொள்ளும். அதுவே, ஆசிரியரின் முதல் வகுப்பாக இருந்தால் அந்த நாள் முழுவதும் நமக்கு Energitic Day தான்.
படிப்பில் சந்தேகம் இல்லாவிட்டால் கூட, ஆசிரியரை பார்க்க வேண்டும் என்பதற்காக புத்தகங்களை எடுத்துக்கொண்டு நண்பர்களோடு சேர்ந்து ஆசிரியரை பார்க்க செல்வது, அங்கு சென்றவுடன் ஆசிரியரின் ஒவ்வொரு அசைவுகளையும் நோட்டமிடுவது.
ஒரு வேலை ஆசிரியர் கடிந்துகொண்டால் கூட அதனை ஒரு பாராட்டாக எடுத்துக்கொள்வது என பல்வேறு வித சந்தோஷமான சங்கதிகள் அரங்கேறும்.
பள்ளிப்பருவத்தை கடந்து கல்லூரி, வேலைவாய்ப்புகள் என காலம் கடந்தாலும், ஆசிரியர்கள் மீது பள்ளிப்பருவத்தில் ஏற்பட்ட Crush-ஐ யாராலும் மறக்க முடியாது.
இதுபோன்ற ஒருவித ஈர்ப்பு அனைவரது வாழ்க்கையிலும் கண்டிப்பாக நடந்திருக்கும் ஒன்று.
ஆனால், பள்ளிப்பருவத்தில் முழுக்க முழுக்க நிறைந்திருப்பது தன்னலமற்ற ஒருவித அப்பாவித்தனமான ஈர்ப்பு மட்டுமே ஆகும்.