இருமல், காய்ச்சல், உடல் பருமன் பிரச்சனைகளுக்கு அற்புதமான தீர்வு இதோ!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

உடலில் ஏற்படும் பல்வேறு உபாதை பிரச்சனைகளை போக்க இயற்கையில் உள்ள அற்புதமான வழிகள் இதோ!

 • துளசி இலைகள் போட்டு ஊறவைத்த நீரை தினமும் குடித்து வந்தால் தொண்டைப் புண் ஏற்படுவது தடுக்கப்படும்.
 • தண்ணீரில் சிறிது கருப்பட்டியை கரைத்து உணவு சாப்பிட்ட பின் குடித்து வந்தால், வயிற்றில் அமிலம் சுரப்பது குறையும்.
 • உடல் எடையை குறைக்க 1/4 தேக்கரண்டி கரு மிளகுத் தூள், 3 தேக்கரண்டி எலுமிச்சை சாறு, 1 தேக்கரண்டி தேன் ஆகியவற்றை 1 டம்ளர் நீரில் கலந்து, இதை 4 மாதங்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர வேண்டும்.
 • காலை உணவு சாப்பிடுவதற்கு முன் தினமும் ஒரு தக்காளி சாப்பிட்டு வர வேண்டும். இவ்வாறு 4 மாதங்கள் செய்தால். உடல் எடை விரைவில் குறையும்.
 • தினமும் காலையில் 4 மாதங்கள் தொடர்ந்து 12 கருவேப்பிலை இலைகளை சாப்பிட்டு வந்தால், 3 மாதங்களில் உடல் பருமனில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.
 • அன்றாட உணவில் அரிசி, உருளை கிழங்கு போன்ற மாவுச் சத்துப் பொருட்களை குறைத்து, கோதுமையை அதிகமாக உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் எடை கட்டுக்கோப்பாக இருக்கும்.
 • 3 கப் தண்ணீருடன் வெற்றிலையையும், மிளகையும் போட்டு கொதிக்க வைத்து குடித்து வந்தால், கடுமையான இருமல் பிரச்சனை குணமாகும்.
 • தாங்கமுடியாத பல்வலி குறைய 2 துளசி இலை, சிறிதளவு உப்பு மற்றும் மிளகுத்தூள் ஆகியவற்றை வலி இருக்கும் இடத்தில் வைத்து அழுத்தினால், வலி குறையும்.
 • சருமத்தில் உள்ள சிறு தழும்புகளைப் போக்க குளிக்கும் நீரில் துளசி இலைகளை போட்டு குளிக்க வேண்டும்.
 • குழந்தைகளுக்கு ஏற்படும் காய்ச்சல் மற்றும் இருமலுக்கு நீருடன் தேன் கலந்து கொடுத்தால் விரைவில் குணமாகும்.
 • கேரட் மற்றும் தக்காளிச் சாறுடன், தேன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் உடல் வலிமையாக இருக்கும்.
 • வயிற்றுப் போக்கை உடனடியாக நிறுத்த கொய்யா இலைகளை மென்று தின்றால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*