முதலை வாயில் தலையை நுழைத்த சர்க்கஸ் ஊழியர்: நடந்த விபரீதம்!

பிறப்பு : - இறப்பு :

வியட்நாமில் புகழ்பெற்ற சர்க்கஸ் நிறுவனத்தில் சர்க்கஸ் கண்காட்சி நடைப்பெற்றது. அதை காண பல மக்கள் சர்க்கஸ் நடந்த அரங்குக்குள் வந்திருந்தனர்.

அப்போது சர்க்கஸ் விளையாட்டில் ஈடுபடும் ஒருவர், முதலை வாயில் தன் தலையை நுழைக்கும் நிகழ்ச்சியை நடத்தினார்.

அப்போது திடீரென முதலை அந்த நபரின் தாடையை பிடித்து கொண்டது. பின்னர் சுதாரித்து கொண்ட அவர் முதலையிடமிருந்து ஒரு வழியாக மீண்டார்.

முதலை கடித்ததில் அவர் முகத்தில் படுகாயம் ஏற்பட்டுள்ளது. இதற்காக அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதனிடையில், அடிப்பட்ட நபர் வழக்கமாக சர்க்கஸில் காட்டும் முதலை சில நாட்களுக்கு முன்னர் இறந்துள்ளது.

அதனால், அதிகம் பழக்கமில்லாத புது முதலையை வைத்து விளையாடியதால் அது அவரை கடித்துள்ளது தெரியவந்துள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit