இனி உங்க கையில பணம் நிற்காது என்பதை உணர்த்தும் சில அறிகுறிகள்!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

ஜோதிடத்தின் படி, நம் வாழ்வில் நடக்கப் போகும் ஒவ்வொரு விஷயமும் காரணமின்றி மற்றும் எச்சரிக்கையின்றி நடக்காது. அது நல்ல காரியமாகட்டும் அல்லது கெட்ட காரியமாகட்டும், எந்த ஒரு விஷயம் நடக்கப் போவதாக இருந்தாலும், அது ஒருசில அறிகுறிகளை வெளிக்காட்டும்.

எப்படி பிறப்பி இறப்பின் அறிகுறியோ, மோசமான உடல்நிலை நோயின் அறிகுறியோ, அதேப் போல் ஒருவர் சந்திக்கப் போகும் நிதி பிரச்சனையும் குறிப்பிட்ட சில அறிகுறிகளை வெளிக்காட்டும். இங்கு இனிமேல் உங்கள் கையில் பணம் நிற்காது என்பதை உணர்த்தும் சில அறிகுறிகள் கொடுக்கப்பட்டுள்ளது.

எப்போது வீட்டில் தண்ணீர் மற்றும் மின்சார இணைப்பு பிரச்சனைகள் அடிக்கடி வருகிறதோ, உங்களைத் தேடி கெட்ட நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது என்றும், வீண் செலவுகளால் பணம் கையில் நிற்கப் போவதில்லை என்றும் அர்த்தம்.

தம்பதியருக்குள் வழக்கத்திற்கு மாறாக அடிக்கடி சண்டைகள் வந்தவாறு இருந்தால், வீட்டில் செல்வ வளம் குறையப் போகிறது என்று அர்த்தம்.

உங்களைத் தேடி வந்துக் கொண்டிருந்த நல்ல வாய்ப்பு, திடீரென்று கடைசி நேரத்தில் கை நழுவினால், நிதி பிரச்சனையால் அவஸ்தைப்படப் போகிறீர்கள் என்று அர்த்தம்.

ஜோதிடத்தின் படி, யார் ஒருவர் நிதி பிரச்சனையால் மோசமாக அவஸ்தைப்படப் போகிறாரோ, அவர்களது வாயில் இருந்து அளவுக்கு அதிகமாக எச்சில் சுரக்கும் என சொல்கிறது.

வீட்டில் செல்லமாக வளர்த்து வந்த செல்லப் பிராணி திடீரென்று இறந்துவிட்டால், அந்த குடும்பம் பணப் பிரச்சனையால் அவஸ்தைப்படப் போகிறது என்று அர்த்தம்.

வீட்டின் மேற்கூரையில் இருந்து நீர் ஒழுக ஆரம்பித்தால், அதுவும் அந்த வீட்டில் உள்ள குடும்பம் கடுமையான பணப் பிரச்சனையால் கஷ்டப்படப் போகிறது என்று அர்த்தம்.

கைவிரலில் உள்ள சூரிய மேடு பகுதியில் திடீரென்று மச்சம் வந்தால், அது உங்கள் சேமிப்பு முழுவதையும் காணாமல் செய்யப் போகிறது என்று அர்த்தம்.

வீட்டின் நுழைவாயிலில் எண்ணெய் தெரியாமல் சிதறினால், அதுவும் அந்த குடும்பம் பணப் பிரச்சனையை சந்திக்கப் போவதைக் குறிக்கிறது.

தங்கத்தை இழந்தாலோ அல்லது வைத்த இடம் தெரியாமல் போனாலோ, அது உங்களுக்கு பெரும் பண இழப்பை ஏற்படுத்தப் போவதைக் குறிக்கிறது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*