கடலுக்கு நடுவே ஒரு கல்யாணம் – இது மெக்ஸிகோ மெர்சல்!-(Video)

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

திருமணம் நடுக்கடலில் நடந்தால் எப்படி இருக்கும்னு நம்மளால் யோசிக்க மட்டும்தான் முடியும். ஆனால் இந்த ஜோடி, தான் ஆசைப்பட்டது போலவே கடலுக்கு நடுவில் கல்யாணம் பண்ணியிருக்காங்க.

மெக்ஸிகோவில் கோஸுமெல் என்ற இடத்தில் 100 விருந்தினர்களுடன் நடுக்கடலில் கல்யாணம் முடிந்துள்ளது. கல்யாணம்னு சொன்னாலே ஜாலிதான். அதே கல்யாணம் ஜாலியாவே நடந்தால் எப்படி இருக்கும்? இதற்கு எடுத்துக்காட்டுதான் இந்தக் கல்யாணம்.

நடுக்கடலிலே மோதிரம் மாற்றிக்கொள்வது, தண்ணீருக்கு அடியில் இருவரும் முத்தமிட்டுக் கொள்வது என இவர்களின் திருமண அனுபவமே ஒரு சாகசப் பயணமாக நடந்துள்ளது.

சரி திருமணம்தான் வேற லெவலில் நடக்குதுனு பார்த்தால் புகைப்படக்காரர்கள் தெய்வ லெவலில் போட்டோ எடுத்துள்ளனர். சுற்றிலும் கடல், அழகான தம்பதியினர்… கேட்கவா வேண்டும்? க்ளிக்கித் தள்ளி அழகான கல்யாண ஆல்பத்தை உருவாக்கி விட்டனர்.

எனக்கு மட்டும் சில சந்தேகங்கள் தோன்றுகின்றன. கல்யாணம் ஆகும்போது மோதிரம் மாற்றிக்கொள்வது வழக்கம். அப்படி மாற்றும்போது மோதிரம் தண்ணிக்குள்ள விழுந்தால் என்ன பாஸ் பண்ணுவாங்க? ஒரு வேளை தண்ணீர் க்ரிஸ்டல் க்ளீயரா இருக்கிறதால டபக்குனு எடுத்துருவாங்களோ என்னவோ?

கல்யாணம் பண்ணும் ‘ப்ரைட்’, ‘க்ரூம்’ தான் தண்ணியில் ஜாலியா உலா வர்றாங்கன்னு பார்த்தால் சேர்த்துவைக்கும் சர்ச் ஃபாதரையும் தண்ணிக்குள்ள இறக்கிவிட்டாய்ங்க. இதெல்லாம் பாவம் மை சன். அவரும் வேறு வழியில்லாமல் வடிவேலு மாதிரி ஃபேஸ் ரியாக்‌ஷன்ஸ் கொடுத்து மோதிரத்தை மாற்றும்போது மந்திரத்தை வாசிச்சிக்கிட்டு இருக்கார் பாருங்க.

திருமணம் கோயிலில் நடந்தாலே போகும் இடமெல்லாம் செல்ஃபிதான். இதுல திருமணம் நடுக்கடலில் நடந்தால் சுற்றி இருப்பவர்களுக்கும் கொண்டாட்டம்தான். ஒரு செல்ஃபியைப் போட்டு உடனே ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர்னு அப்லோட் பண்ணி லைக்ஸ் வாங்குவதுதான் முதல் வேலையாக இருக்கும்.

ஒரு சர்ச்சில் நடப்பது போலவே மணப் பெண்ணின் தந்தை தனது மகளைக் கூட்டிக்கொண்டு வருகிறார். இரு பக்கமும் கைத்தட்டி வரவேற்பு, கையில் பூச்செண்டு, மோதிரம் மாற்றிக்கொள்ளுதல் என களைகட்டியது கல்யாணம்.

கடைசியில் மோதிரம் மாற்றி முடித்தவுடன் சுற்றி இருந்தவர்கள் அனைவரும் மணமக்கள் மீது தண்ணீரை வாரியிறைத்து சந்தோஷத்தை வெளிப்படுத்தினர். இனி ‘கரீபியன் சீ’னு சொன்னவுடனே பைரேட்ஸிற்குப் பதிலாக இந்தக் கல்யாணம்தான் எல்லோர் கண் முன்னாடியும் வந்து போகும்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*