இந்தி நடிகையின் கன்னத்தில் அறைந்த வாலிபர் கைது, பரபரப்பு வாக்குமூலம் – வீடியோ

பிறப்பு : - இறப்பு :

டெலிவிஷன் நிகழ்ச்சியின் போது இந்தி நடிகை காவ்கர் கானின் கன்னத்தில் அறைந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். அந்த நபர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார்.

கன்னத்தில் அறைந்தார்!

இந்தி சினிமா நடிகை காவ்கர் கான். மாடலிங் அழகியாக இருந்து ‘ராக்கெட் சிங்’ திரைப்படம் மூலம் இந்தி சினிமா உலகில் அறிமுகம் ஆனவர். டி.வி. நிகழ்ச்சிகளிலும் நடித்து வருகிறார். இவர் நேற்று மும்பை கோரேகாவ் பகுதியில் உள்ள பிலிம் சிட்டியில் படமாக்கப்பட்ட டி.வி. நிகழ்ச்சியில் நடித்துக்கொண்டு இருந்தார். இதில் ஏராளமான பார்வையாளர்களும் திரண்டு ரசித்துக்கொண்டு இருந்தனர்.

இந்த நிலையில் பார்வையாளராக வந்த வாலிபர் ஒருவர் நிகழ்ச்சி படப்பிடிப்பின் இடைவேளையில் திடீரென மேடைக்கு ஏறி சென்றார். அவர் நடிகை காவ்கர் கானை ‘பளார்’ என கன்னத்தில் அறைந்தார். மேலும் நடிகையிடம் தவறாக நடந்து கொண்டதாகவும் தெரிகிறது.உடனடியாக அங்கு இருந்த காவலாளிகள் அந்த வாலிபரை பிடித்தனர். பின்னர் அவர் போலீஸ் வசம் ஒப்படைக்கப்பட்டார். போலீசார் உடனடியாக அவரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

பரபரப்பு வாக்குமூலம்

விசாரணையில் அந்த நபரின் பெயர் முகமது அகில் மாலிக் (வயது 24) என்று தெரியவந்தது. மேலும் நடிகையை கன்னத்தில் அறைந்த காரணம் குறித்து அவரிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது, நடிகை காவ்கர் கான் அரைகுறை ஆடைகளை அணிந்து நடித்தார். இதனால் கோபம் அடைந்து நடிகை கன்னத்தில் அறைந்ததாக அவர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். இது குறித்து ஆரே போலீசார் முகமது அகில் மாலிக் மீது வழக்கு பதிவு செய்து, அவரை மும்பை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவரை 4-ந்தேதி வரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க கோர்ட்டு உத்தரவிட்டது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit