நடிக்கணுமுனா கூச்சம்போகணும், அது ஓகேனா? இளம் பெண்பட்டபாடு இருக்கே அம்மாடியோவ்!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

சினிமா ஒரு கனவு தொழிற்சாலை, அதில் வந்து சாதித்தவா்கள் குறைவு. ஆனால் அந்த தொழில் கால் ஊன்றவேண்டும் என்கிற ஆசையில் பலா் ஊரைவிட்டு ஓடி வருகின்றனா்.

ஒரு சினிமாவில் நடிக்க முதலில் அவா்களுக்கு தேவையானது கவர்ச்சியான புகைப்படங்கள், போட்டோ எடுக்கும் நபரே அவரை எந்த, எந்த விதத்தில் பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுகிறாரோ அந்த, அந்த விதத்தில் பார்த்து விடுவார்.

சிறிது அசந்தால் அந்த நபரே அந்த பெண்ணின் பதத்தையும் பார்த்துவிடுவாராம்.

பின்னா் தனது புகைப்படங்களை பல இயக்குனா்கள், தயாரிப்பாளா்கள் என அனைவரிடத்திலும் கொண்டு சோ்க்க வேண்டும்.

அழகு கொட்டும் பைங்கிளி என்றாலும், நடிக்க வேண்டும் என்றால் எழுதப்படதா சில சட்டங்கள் உள்ளதாம். அதற்கு ஓகே என்றால்தான் அந்த பெண்ணை படம் தயாரிக்கும் நிறுவனம் போட்டோ செசனுக்கு அழைக்குமாம்.

இப்படி தன்னை இழந்துதான் அந்த பெண்கள் ராஜ வாழ்க்கை வாழ்கிறார்கள்.

பட தயாரிப்பாளா், இயக்குனா், ஹீரோ ஆகியோரிடத்தில் தன்னை இழந்தப்பின்பு, எதிர்காலத்தில் தொடா்ந்து நடிக்க அழைக்கவேண்டும் என்பதற்காக, தாய்லாந்து, துபாய் போன்ற நகரங்களுக்கு அவா்கள் அழைக்கும்போது போகவும் வேண்டுமாம்.

இதில் சிலா் நடக்கும் சம்பவங்களை எல்லாம் படம் பிடித்து வைத்துக் கொண்டு, மீண்டும்,மீண்டும் அவா்களுக்கு தொந்தரவு தருவார்களாம்.

படம் நடித்து நன்றாக ஓடினால் போதும் பல வாய்ப்புகள் அவா்களை தேடிவரும், 10 வருடங்களுக்கு மேல் ஒரு நடிகையால் தொடா்ந்து முன்னணி நடிகையாக இருக்க முடியாது,

பின்னா் அக்கா, அம்மா, என்று கேரக்டா் மவுசு குறையுமாம். இதில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து பழக்கப்பட்ட அவா்களால், அந்த வாழ்க்கையை விடமுடியாமல் தவிப்பார்களாம்.

அப்போதுதான் சிலா் தவறான ஐடியாக்களை அவா்களுக்கு கொடுத்து, விபச்சார தொழிலில் இறக்குவா்களாம்.

பின்னா் போலீசாரால் கைதுபடலம், அசிங்கம், அவமானம் என்று தற்கொலையே செய்துக் கொள்ளும் நிலை உருவாகுமாம்.

சினிமாவில் நடிக்க இப்படி ஒரு கதை இருக்க, கர்நாடகாவில் மகளிர் தினத்தன்று புதுமையை செய்துள்ளார், ஒரு புதுமை பெண்.

அதாவது 2004ம் ஆண்டு வெளியான ‘ப்ரீதிமாயே ஹுஷாரூ’ என்ற கன்னட படத்தை தயாரித்தவர் விரேஷ். இவரிடம் ஒரு இளம்பெண் சினிமா வாய்ப்பு கேட்டுள்ளார். தான் அடுத்து தயாரிக்கும் படத்தில் கண்டிப்பாக அந்த பெண்ணை நடிக்க வைப்பதாக விரேஷ் உறுதியளித்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 8ம் தேதி அந்த இளம்பெண் அவரது வீட்டில் தனியாக இருந்தபோது விரேஷ் அங்கு சென்றுள்ளார்.

அவரிடம் சினிமா பற்றி பேச தொடங்கிய விரேஷ், மெல்ல மெல்ல அப்பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதைக் கண்டு அதிர்ச்சியான அந்த பெண், அவரிடமிருந்து தப்பி வீட்டின் வெளியே ஓடி, கதவை மூடி தாழ்ப்பாள் போட்டு விட்டு, அவரது குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினருக்கு இதுபற்றி தெரிவித்தார்.

அவர்கள், விரேஷிற்கு தர்ம அடி கொடுத்தனர்.

அதன்பின் போலீசாரிடம் அவரை ஒப்படைத்தனர். இந்த விவகாரம் கன்னட சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது போன்ற வீரமங்கைகளுக்கு நாம் வாழ்த்துச் சொல்லுவோம் சபாஷ், பெண்ணே சபாஷ்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*