பாம்புகள் மட்டுமே வாழும் மர்ம தீவு..!மனிதர்கள் சென்றால் அவ்வளவு தான்…!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

அட்லாண்டிக் பெருங்கடலில் பிரேஸிலின் சா பாலோ மாகாணத்தில் இருந்து சுமார் 33 கி.மீ. தொலைவில், 4,30,000 ச.மீ. பரப்பளவு கொண்ட ஒரு தீவு உள்ளது.

Ilha da Queimada Grande என்று அழைக்கப்படும் இந்த தீவில் எண்ணிலடங்காத அளவில் பாம்புகள் இருக்கின்றன. இதனாலேயே இதற்கு பாம்புகள் தீவு என்று மற்றொரு பெயர் உள்ளது.

உலகில் மனிதர்கள் வாழ்வதற்கும், சுற்றுலா செல்வதற்கும் தடை செய்யப்பட்டுள்ள இடங்களில் இந்தத் தீவும் ஒன்று என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

இந்தத் தீவில் நாம் கால்வைக்கும் ஒவ்வொரு 4 அடிக்கும் ஒரு பாம்பையாவது நம்மால் பார்க்க முடியும். அதிலும் கோல்டன் பிட் வைப்பர் என்ற பாம்பு வகையே இங்கு அதிகளவில் காணப்படுகின்றன.

இந்தத் தீவில் உள்ள பாம்புகளைப் பாதுகாப்பதற்காகவே இந்த பாம்புத் தீவு மூடி வைக்கப்பட்டுள்ளது. மனிதர்களால் இவைகளுக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என்றே இங்கு யாரையும் அனுமதிப்பதில்லை என்று பிரேஸிலில் உள்ள கப்பற்படையினர் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த தீவிற்குள் ஆராய்ச்சி செய்வதற்காக செல்ல வேண்டும் என்றால் சிறப்பு அனுமதி பெற்றிருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*