நிகழ்ச்சிக்காக மனித மூளையை சாப்பிட்ட தொலைக்காட்சி தொகுப்பாளர்! அருவருப்பான வீடியோ!

பிறப்பு : - இறப்பு :

இந்தியாவில் பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் அகோரியுடன் சேர்ந்து மனித மூளையை சாப்பிட்ட சம்பவம் வீடியோவாக வெளியாகி அதிர வைத்துள்ளது.

பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளரான ரேசா அஸ்லான் என்ற நபரே இச்செயலில் ஈடுபட்டுள்ளார்.

Believer என்ற நிகழ்ச்சிக்காக இந்தியாவின், வாரணாசி பகுதியில் பயணம் மேற்கொண்ட அஸ்லான், அங்கு அகோரி ஒருவரை சந்தித்துள்ளார்.

அஸ்லானின், உடல் முழுக்க மனித சாம்பலை வீசிய அகோரி தீயில் சுட்ட மனித மூளையை தானும் சாப்பிட்டு, அஸ்லானுக்கும் கொடுத்து சாப்பிட வைத்துள்ளார்.

குறித்த காட்சி அனைத்தும் நிகழ்ச்சிக்காக பதிவு செய்யப்பட்டுள்ளது, பின்னர், கோபமடைந்த அகோரி, அஸ்லான் உட்பட நிகழ்ச்சி குழு மீது தனது மலத்தை வீசி விரட்டியுள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த அஸ்லான், மனிதனின் மூளை அடுப்புக்கரி சுவையில் இருந்தது. இது ஒரு தவறாக இருக்கலாம் என தான் உணர்வதாக தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்ச்சியை பார்த்த இந்து மதத்தினர் தங்களது மத கலாச்சாரத்தை இழிவுபடுத்தும் வகையில் உள்ளது என கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

எனினும், இதற்கு பதிலளித்த அஸ்லான், இது அகோரிகளை பற்றிய நிகழ்ச்சியே தவிர, இந்து மதத்தை பற்றிய நிகழ்ச்சி அல்ல என பதிலளித்துள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit