தமிழ் மக்கள் மட்டுமல்ல சிங்கள மக்களும் மஹிந்த மீது வெறுப்பில்; சோபித தேரர்

பிறப்பு : - இறப்பு :

தமிழ் மக்கள் மாத்திரமன்றி பெரும்பாலான சிங்கள மக்களும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மீது வெறுப்பில் உள்ளதாக நியாயமான சமூகத்திற்கான தேசிய அமைப்பின் தலைவர் மாதுலுவாவே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.

மகிந்த ராஜபக்சவின் ஆட்சி பொலிஸ் சேவை தொடக்கம் நீதிமன்றம் வரை காணப்படுகிறது. இதனால் ஊழல், குற்றம் புரிபவர்கள் அரசாங்கத்தால் பாதுகாக்கப்படுவதால் மக்கள் அதன்மூலம் பாதிப்படைகின்றனர்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையினால் இந்நாட்டின் ஜனநாயகம், சட்டம் மற்றும் நல்லாட்சிக்கு பங்கம் ஏற்பட்டுள்ளதால் வலுவான பொறிமுறையின் கீழ் அரசியல் யாப்பு மாற்றம் செய்யப்பட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த கோரிக்கையை தற்போதைய அரசாங்கம் ஏற்க மறுப்பு தெரிவித்ததால் தான் உள்ளிட்ட சந்திரிக்கா குமாரதுங்க, ரணில் விக்ரமசிங்க போன்ற குழுவினர் மகிந்த ராஜபக்சவிற்கு எதிராக மைத்திரிபால சிறிசேனவை பொது வேட்பாளராக களமிறக்கத் தீர்மானித்தோம் என அவர் சுட்டிக்காட்டினார்.

சிரேஸ்ட பிக்குகள் மகிந்த ராஜபக்சவை எதிர்த்து நிற்பதால் அவரால் நினைத்த அளவு சிங்கள – பௌத்த வாக்குகளைப் பெற முடியாது தற்போதுள்ள நிலைமையில் தமிழ் மக்களின் வாக்குகள் ராஜபக்சவிற்கு கிடைக்க வாய்ப்புள்ளது.

ஆனால் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை ஒழிப்பு விடயத்தில் தமிழர்களின் வாக்கு தீர்மானிக்கக் கூடிய ஒன்று. தமிழ் மக்களின் பிரச்சினை குறித்து நியாயமான பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும்.

அத்துடன் பாராளுமன்ற தெரிவுக் குழு ஊடாக தமிழ் தலைவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவிலிருந்து வெளிவரும் பத்திரிகை ஒன்றிற்கு அளித்த செவ்வியிலேயே அவர் இதனைக் தெரிவித்துள்ளார்

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit