தமிழீழம் எனும் பெருங்கனவினைச் சுமந்த பெருமகன் நாட்டுப்பற்றாளர் மாணிக்கவாசகம் ஜெயசோதி

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

தமிழீழம் எனும் பெருங்கனவினைச் சுமந்தவாறு இனத்தின் விடுதலைக்கான செயற்பாட்டுத் தளத்திலும் சமூகதளத்திலும், அயராது உழைத்த பெருமனிதர் திரு.மாணிக்கவாசகம் ஜெயசோதி அவர்கள் என தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது மரியாதை வணக்கத்தினைத் தெரிவித்துள்ளது.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதற் தவணைக்கால தேர்தலுக்கான பரப்புரைக்கும் வாக்களிப்புக்கும் , ஆர்ஜொந்தெய் நகரத்தில் களம் அமைத்துக் கொடுத்து அதனை திறன்பட நடத்திய செயலினை நாம் இவ்வேளை நன்றியோடு நினைந்து கொள்கின்றோம் என

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஊடகம் மற்றும் பொதுசன விவகாரங்கள் அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :

ஆர்ஜொந்தெய் தமிழ்சங்கத்தின் தலைவராக, தமிழர் புனர்வாழ்வுக்கழக உறுப்பினராக, தமிழர் விளையாட்டுக்கழகம் 95 செயற்பாட்டாளராக என, பிரான்ஸ் தமிழ்சமூகத்தின் பல்வேறு அசைவியகங்களிலும், தன்னை முன்னிலைப்படுத்தாது நீண்டகாலமாக களப்பணியாற்றிய செயல்வீரர் திரு.மாணிக்கவாசகம் ஜெயசோதி அவர்கள்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதற் தவணைக்கால தேர்தலுக்கான பரப்புரைக்கும் வாக்களிப்புக்கும் ஆர்ஜொந்தெய் நகரத்தில் களம் அமைத்துக் கொடுத்து அதனை திறன்பட நடத்திய செயலினை நாம் இவ்வேளை நன்றியோடு நினைந்து கொள்கின்றோம்.

ஆர்ஜொந்தெய் நகரில் செறிந்து வாழும் தமிழ்மக்களை மொழி, பண்பாடு, கலாசாரத் தளங்களில் ஒருங்கிணைத்து இனத்தின் விடுதலைக்கும் மேம்பாட்டுக் உழைத்த செயற்பாடு போற்றுதலுக்குரியது.

இவரது பிரிவால் வாடும் குடும்பத்தினர், உற்றார், உறவினர், நண்பர்கள், ஆர்ஜொந்தெய் தமிழ சங்கம், ஆர்ஜொந்தெய் வாழ் தமிழ்மக்கள் அனைவரது கரங்களையும் இத்தருணத்தில் தோழமையுணர்வுடன் பற்றி, ஆறாத்துயரில் நாமும் பங்கெடுத்துக் கொள்கிறோம்.

இவ்வாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஊடகம் மற்றும் பொதுசன விவகாரங்கள் அமைச்சுமற்றும் பிரான்ஸ் மக்கள் பிரதிநிதிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரவிக்கப்பட்டுள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*