என்னையா மேடையில் அழவிடுறே: மவனே மாட்டு! வாழ்க சுசி: சிவ கார்த்தி ஹாப்பி!

பிறப்பு : - இறப்பு :

என்னை வெல்ல யாராலும் முடியாது என்று உலகையே நடுங்க வைத்த மாவீரன் அலெக்ஸாண்டர் ஒரு நாள் பொசுக்கென்று செத்துப் போனான்.

உலக நாடுகளை நடுநடுங்க வைத்த நெப்போலியன் கடைசி காலத்தில் பூனையைக் கண்டு நடுங்கி இறந்து போனான்.

லட்சக்கணக்கான மக்களை கொன்று குவித்த ஹிட்லர் பயந்து போய் தற்கொலை செய்து கொண்டான்.

இப்படி பீடிகை போட்டு தனுஷ், சிவ கார்த்திகேயன் பற்றி கோலிவுட்டில் பேசுகிறார்கள். ஒரு ஆடியோ வெளியீட்டு விழாவில் பொது மேடை என்றும் பாராமல் கதறினார் அவர்.

ரஜினி உட்பட திரையுலகினர் அதிர்ந்து போனார்கள். ரஜினி நேரில் அழைத்து சிவாவிடம் விவரம் கேட்க, தனுஷ் கொடுக்கும் குடைச்சல்கள் பற்றி அழுது புலம்பியதாக அப்போது பேசப்பட்டது.

தன்னை இனி யாரும் அசைக்க முடியாது என்கிற நிலையில் தான் தனுஷ் இருந்தார். காரணம் கொட்டிக் கிடக்கும் பணம், கூடவே மாமனார் பணமும் சேர்த்தால் தனுஷ் இன்று இந்தியாவிலேயே பெரும் பணக்காரர்.

ஆனால் ஒரே ஒரு பொண்ணு தனுஷின் தூக்கத்தை கெடுத்து விட்டார். ஆமாம் சுசி லீக்ஸ் என்கிற பெயரில் வரும் பாலியல் குற்றச்சாட்டுகள், இந்த ஒரு வாரமாக தனுஷ், ரஜினி குடும்பத்தில் பெரும் புயல் வீசுகிறது.

தனுஷ் பதில் ஏதும் கூறாமல் வீட்டிற்குள் முடங்கிப் போனார். மேடையில் கண்ணீர் விட்டு கதறிய சிவ கார்த்திகேயன் இப்போது மிகவும் மகிழ்வார் என்கிறார்கள் கோடம்பாக்கத்தினர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit