துப்பாக்கியை காட்டி மிரட்டி பணம் சம்பாதிக்கும் மூன்று வயது சிறுவன்? அதிர்ச்சி வீடியோ

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

மூன்று வயது சிறுவன் ஒருவன் மிரட்டி பணம் கேட்பது தொடர்பான விடியோ தற்போது இணையத்தில் வெளியாகி அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மூன்று வயது சிறுவன் ஒருவன் கோபத்துடன் உள்ள பறவையின் டீ சர்ட்டை அணிந்தபடி உள்ளார். அவர் தன் கையில் ஒரு துப்பாக்கியை வைத்து காமிரா முன்பு மிரட்டுவது போன்று பேசியுள்ளார். அதில் அவர் ஸ்பேனிஷ் மொழி பேசியதாக கூறப்படுகிறது.

அச்சிறுவன் கையில் துப்பாக்கியுடன் தனக்கு பணம் வேண்டும் என்றும் 30,000 பக்ஸ் வேண்டும் என்று மிரட்டுகிறார். மேலும் அச்சிறுவன் அதில் ஒரு சில வார்த்தைகளை ஆக்ரோசமாக கூறியபடி காமிரா முன்பு வந்து மிரட்டுகிறார்.

இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இது குறித்து சிலர் கூறுகையில், இதில் இருக்கும் சிறுவனுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது என்றும் திருட்டுத்தனங்கள் எப்படி எல்லாம் செய்யலாம் என்று பயிற்சி அளித்துள்ளதாக கூறிவருகின்றனர்.

ஆனால் அச்சிறுவன் கையில் வைத்திருக்கும் துப்பாக்கி உண்மையானதா அல்லது பொம்மை துப்பாக்கியா என்பது குறித்து சரியான தகவல் தெரியவில்லை என்று கூறப்படுகிறது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*