சுவிசில் மாமனிதர் சாந்தன் வணக்க நிகழ்வு (படங்கள் , வீடியோ இணைப்பு)

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

தமிழீழத்தின் முன்னணிக் கலைஞர் மாமனிதர் சாந்தன் அவர்களின் வணக்க நிகழ்வு சுவிஸ் நாட்டின் தலைநகர் பேர்ண் மாநகரில் ஞாயிற்றுக் கிழமை பிற்பகல் உணர்வுபூர்வமாக நடைபெற்றது. சுவிஸ் வாழ் புங்குடுதீவு உறவுகளால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில் சுவிஸ் நாட்டின் பல மாநிலங்களிலும் வாழும் நூற்றுக் கணக்கானோர் கலந்து சிறப்பித்தனர்.

தனது தனித்துவக் குரலால் தமிழ்த் தேசியத்துக்கு வலுச் சேர்த்த அமரர் சாந்தனின் உருவப் படத்திற்கு மலர் தூவி, தீபம் ஏற்றி நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரும் அஞ்சலி செலுத்தினர். சுவிஸ் ராகம் கரோக்கே இசைக் குழுவின் நிறுவனர் சதா அவர்களின் வரவேற்புரையுடன் ஆரம்பமான நிகழ்வில் கவிஞர் மதி, கவிதாயினி சிவதர்சினி, கவிஞர் பொலிகை ஜெயா, கவிஞர் சிவமேனகை ஆகியோர் கவி அஞ்சலி நிகழ்த்தினர்.

படங்களைக் காண இங்கே அழுத்துங்கள்

விடுதலைப் புலிகளின் கலை பண்பாட்டுக் கழகப் பொறுப்பாளர் கொலம்பஸ், தூண் நகரசபை உறுப்பினர் திருமதி தர்சிகா கிருஸ்ணானந்தன், கவிஞர் ரமீந்திராணி அருட்செல்வம், ஊடகவியலாளர் சண் தவராஜா ஆகியோர் உட்படப் பலர் இரங்கலுரை நிகழ்த்தினர்.

சுவிஸ் ராகம் கரோக்கே இசைக்குழுவினர் அமரர் சாந்தன் அவர்களின் பாடல்களைப் பாடி அவரின் நினைவுகளை மீட்டமை குறிப்பிடத்தக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*