யாழ் மக்களின் பணத்தை சுரண்டும் திசைகாட்டி – ஓர்பார்வை.

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

thisaikaaddiiiii

பொதுவாகவே உழைத்து முன்னேறவேண்டும் தமது உறவுகளை வாழவைக்கவேண்டும், சகல வசதிகளுடனும் வாழ வேண்டும் என்று விருப்பம் கொண்டு உழைப்பவர்கள் தமிழர்கள் . அதிலும் யாழ்ப்பாண தமிழர்களின் முயற்சி என்பது பீனிக்ஸ் பறவை போன்றது. எவ்வளவு தான் அழிவை ஏற்படுத்தினாலும் பொருளாதாரத்தினை உடனே சீர்படுத்தி முன்னேற்றம் காணும் இயல்பு எமக்குரியது.

இவ் வளர்ச்சிக்கெல்லாம் அத்திவாரமாய் இருப்பது நமது புலம்பெயர் உறவுகள். ஆரம்பத்தில் ஆள் கடத்தல் காரர்களுடாக வெளிநாடு சென்ற எம்மக்கள் அவ்வழிகள் எல்லாம் போராட்டம் முடிந்ததும் அடைபட்டு போகவே தேர்ந்தெடுத்த வழிதான் மாணவர் விசா மூலம் வெளிநாடு சென்று கல்வி கற்பதுடன் பணமீட்டுவது தான் .subaseelan (12)

அவ்வாறு மாணவர் விசா பெறுவதற்காக பலநிறுவனங்களும் தலை நகரில் இருந்ததுடன் அவற்றின் ஊடாக பலர் வெளிநாடுகளுக்கு சென்றார்கள் . சில நிறுவனகள் தில்லுமுல்லுக்களை செய்தாலும் போனவர்கள் கொழும்பு நிறுவனம் என்றபடியால் கவனமாகவே பணவிடயத்தினை கையாண்ட படியால் பாரிய மோசடிகளை தவித்துக் கொண்டனர்

thisaikaaddi1

அவ்வியாபரம் நன்றாக நடந்தமையால் 2013 ன் ஆரம்பத்தில் யாழ்ப்பாண மக்களை நோக்காக கொண்டு ஆரம்பிக்க பட்டது தான் திசைகாட்டி என்னும் இந்த மோசடி நிறுவனம் . இந்த நிறுவனத்தின் உண்மையான நிர்வாகிகள் யார் என்பதில் ஐயங்கள் காணப்படினும் செல்வராஜா என்பவரால் ஆரம்பிக்கப்பட்டதாக பதிவுகள் சொல்லுகின்றன. ஆரம்பத்தில் யாழ் நகரில் இருந்த இன் நிறுவனம் பின்பு அதனை ஆனைப்பந்தி சந்திக்கருகாமையில் மாற்றி அமைத்துக்கொண்டது. பொதுவாக அழகான இளம்பெண்களை முகமையாளர்களாக வேலைக்கமர்த்தி கவர்ச்சிகரமான விளம்பரங்களை யாழ் நாளிதழ்களில் வெளியிட்டு யாழ்ப்பாண மக்களை அதன்பால் கவர்ந்தது.

subaseelan (7)

தினந்தோறும் விளம்பரம், மாதந்தோறும் மாறும் படிப்பு குறைந்த அனுபவம் குறைந்த ஆனால் அழகான முகாமையாளர்கள் என நிறுவனம் சிறுக சிறுக யாழ்ப்பாண மக்களை ஏமாற்ற தொடங்கியது. ஆரம்பத்தில் ஆசை வார்த்தை கூறி கதைப்பதும் காசை பெற்ற பின் ஏறெடுத்து பார்க்காமல் விடுவதுமாக இதன் வியாபாரம் (?) கொடிகட்டி பறந்தது.

thisaikaaddi

thisa copy thisa1

இதன் உரிமையாளராக சுபசீலன் என்பவர் காணப்பட்டார். இவரோடு இவர் மனைவி சொருபா, இவரது அன்புத் தோழி(?) சுகந்தி மற்றும் இந்துயா, சஜீலா போன்றவர்களும் இந்த ஏமாற்று நாடகத்தில் பாத்திரம் ஏற்று நடித்தனர்.

10802030_1580708198816132_5243090094321467192_n

இவர்களது நாடகம் மிகவும் திட்டமிடப்பட்டதாகவும் தொழில்நுட்ப சேர்வைகளையும் கொண்டிருந்தது. விசா முற்பணம் என காசை வாங்குவது அதனை வட்டிக்கு விடுவது , பணம் தந்த நபரை அது செய்கிறோம், இது செய்கிறோம் அதை கொண்டு வா , இதை கொண்டு வா என அந்தரிக்க விட்டு காலத்தை ஓட்டுவது பணம் தந்தவர் கேட்கத் தொடங்கியதும் அவரிடம் பற்று சீட்டை கேட்பது ( ஏனெனில் பற்று சீட்டு அழிந்து போகக் கூடிய மையினாலே அச்சிடப்பட்டிருக்கும், அவரால் பணம் கொடுத்ததை உறுதிப்படுத்த முடியாது போகும் )

thisaikaaddi subaseelan bill3 thisaikaaddi subaseelan bill1 thisaikaaddi subaseelan bill

 தவணைகளில் தருகின்றோம் என்று காசோலை கொடுப்பது, காசோலைகளில் கையெழுத்துக்களை மாறி வைப்பது , போனில் மிரட்டுவது நல்ல பிள்ளையாக நாங்கள் முற்பணம் வாங்க மாட்டோம் என தேசிய நாளிதழ் உட்பட்ட நாளிதழ்களில் விளம்பரம் செய்வது என நன்றாகவே முட்டாளாக்கினர் யாழ் மக்களை.

subaseelan (13)

valampurii

இவர்களுக்கு ஆதரவாகவும் பின் இருந்து இயக்குபவர்காலவும் யாழ் தேசிய நாளிதளின் உரிமையாளரின் உறவினர் காணப்படுவதாகவும் ஒரு செய்தி காணப்படுகின்றது . ஏற்கனவே சப்பிரமான நிறுவனத்தினை நடாத்தி யாழ் மக்களின் பணத்தினை கொள்ளை அடித்தவர்களுக்கு, குளிர்களியில் யாழ் வியாபாரிகளது வயிற்றில் அடித்தவர்களுக்கு இது பெரிய விடயமாக இருக்கபோவதில்லை அடுத்த பாராளுமன்ற தேர்தலில் மக்கள் தீர்ப்பு வரும்வரை.

thisaikaadddi thisaikaadi2

இந்த நிறுவனத்திடம் பணம் கொடுத்து ஏமாந்தோர் தொடர்பாக எமக்கு கிடைத்த விவரங்கள் வருமாறு

Pramni Anushan – 30 lakhs
kanagasabai mahendram – 11 lakhs
Shanmugam – 15 lakhs
Sarujan – 5 lakhs
Niruban – 4 lakhs

இந்த நிறுவனத்தினால் கொடுக்கப்பட்டு வங்கியால் கையெழுத்து பிழையாக உள்ளதாக மறுக்கப்பட்ட காசோலையின் படம் இது. கடந்த 07/11/2014 திகதியிடப்பட்ட இந்த காசோலையானது மக்கள் வங்கியின் ஸ்டான்லி வீதி கிளையினால் மறுக்கப்பட்டுள்ளது. இந்த கணக்கு சுபசீலன் மற்றும் அவர் மனைவி சொருபாவினுடையதாகும்.

thisaikaaddi cheque front thisaikaaddi cheque back

இவர்களுக்கெதிராக போராட்டம் நாளை (01.12.2014) மனித உரிமை ஆணைக்குழு அலுவலக முன்றலில் நடைபெற உள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளதோடு மேற்படி விடையம் தொடர்பாக சுபசீலன் என்பவரால் பலருக்கு மிரட்டல்கள் வந்தவாறு உள்ளதாகவும் தெரியவருகின்றது.

எதோ SLAS பதவி உயர்வு கிடைத்ததை போல படத்திற்கு போஸ் கொடுத்தபடி ,சுபசீலன் சர்வதேச தொடர்பாரானார் என உதயன் நாளிதழ் செய்தியாக வெளியிட வேண்டிய அளவிற்கு சுபசீலன் முக்கியமானவரா? இல்லை திசைகாட்டி முக்கியமானதா? என்பது தான் விடை இல்லாத கேள்வியாக தற்போது உள்ளது ஆனால் எப்போதும் விடை இல்லாது போகாது .

thisaikaaddi subaseelan

எமது இணையத்தளத்தில் இது தொடர்பாக வெளியான செய்திகளை படிக்க கீழ்வரும் இணைப்புக்களை அழுத்துக

செய்தி 1

செய்தி 2

நன்றி யாழ் -அன்பன்
-நிலவன்-

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit