தவறு செய்யாதவர்கள் ஏன் பேசுவதற்கு பயப்பட வேண்டும்? – சஞ்சிதா ஷெட்டி

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

பின்னணிப் பாடகி சுசித்ராவின் கணக்கில் இருந்து வெளியாகும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பற்றி நடிகை சஞ்சிதா ஷெட்டி கருத்து தெரிவித்துள்ளார்.

கடந்த நில நாட்களாக, பாடகி சுசித்ரா டிவிட்டரில் பதிவு செய்து வரும் தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் மிகுந்த பரபரப்பையும், பலத்த சர்ச்சையையும் ஏற்படுத்தி வருகிறது. அட்ஜஸ்மெண்ட என்ற பெயரில் நடிகை, நடிகர்கள் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் எனக்கூறி, சின்னத்திரை டிடி, தனுஷ், ஹன்சிகா, அனிருத், ஆண்ட்ரியா ஆகியோரின் நெருக்கமான புகைப்படங்களை தனது டுவிட்டர் பக்கத்தில் சமீபத்தில் வெளியிட்டார். இந்த சமூக வலைத்தளங்களில் ஹாட் டாபிக்கானது. தமிழ் சினிமா உலகினருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதன்பின், சூதுகவ்வும் படத்தில் நடித்த சஞ்சிதா ஷெட்டி நிர்வாணமாக உள்ள புகைப்படம் மற்றும் வீடியோக்கள் வெளியிடப்பட்டது. ஆனால் அந்த வீடியோவில் இருப்பது நான் இல்லை என சஞ்சிதா ஷெட்டி மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது “ அந்த வீடியோவில் இருப்பது நான் இல்லை. இந்த விவகாரம் என்னை மட்டுமில்லாமல், என்னுடைய குடும்பத்தினரையும் கடுமையாக பாதித்துள்ளது. ஆனால், என்னுடைய அதிர்ஷ்டம், என்னுடைய குடும்பம் என்னை நம்புகிறது. அவர்கள் எனக்கு ஆதரவாக நிற்கிறார்கள். இது தொடர்பாக எனக்கு வரும் தொலைபேசி அழைப்புகளுக்கு நான் பொறுமையாக பதில் சொல்லிக்கொண்டிருக்கிறேன். தவறு செய்யாதவர்கள் பேசுவதற்கு பயப்படத் தேவையில்லை. நான் எப்போதும் என்னுடைய வேலைக்கு உண்மையாக இருந்திருக்கிறேன். அதுதவிர வேறெதற்கும் நான் கவலைப்பட்டதில்லை. திரையுலகில் என்னைப் பற்றி இதுவரை எந்த கிசுகிசுவும் வந்ததில்லை. இதற்கு பின்னால் யார் இருக்கிறார்கள், அவர்களின் நோக்கம் என்ன என எனக்கு தெரியவில்லை. எனக்கு எதிரிகளும் கிடையாது. இந்த விவகாரத்தில் பலரும் எனக்கு ஆதரவாக நிற்பது எனக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது” என அவர் கூறியுள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*