அனுஷ்காவின் தந்திரம் – கடுப்பில் ஹிரோ

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

கட்டுமஸ்தான உடற்கட்டிருந்தால் ஹீரோயின்களை வளைத்துவிடலாம் என்று ஒரு சில ஹீரோக்களின் மனதில் நப்பாசை ஒட்டிக்கொண்டிருப்பது சகஜம். ஷூட்டிங் ஸ்பாட்டில் சான்ஸ் கிடைக்கும்போது தனது ஆசையை லேசாக இனிப்பு தடவி பேச்சோடு பேச்சாக நூல்விடுவதும் வழக்கம். அப்படி சிக்கிய ஹீரோயின்கள் பலர் காதல் வலையில் சிக்கிக்கொள்வதும் உண்டு. இதில் ரொம்பவே உஷார் பார்ட்டி அனுஷ்கா. ஹீரோக்களுடன் நெருங்கி பழகி நட்பை வளர்த்துக்கொண்டாலும் அவர்களிடம் லகுவாக நடந்து கழுவுற மீனில் நழுவுற ரகம். இதுவரை பல்வேறு ஹீரோக்களுடன் நடித்தாலும் லவ் மேட்டரில் நாக சைதன்யா, ஆர்யாவுடன் மட்டுமே இணைத்து பேசப்பட்டார்.

அதுவும் ஆர்யா தயாரிப்பில் உருவான படம் ஒன்றின் கேசட் விழாவுக்கு அழைத்தும் வராமல் தட்டிக்கழித்து அந்த கிசுகிசுவுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். திரிஷா, ராகினி திவேதி, பிபாஷா பாசு என வரிசையாக ஹீரோயின்களுடன் மன்மத விளையாட்டு நடத்தி வந்தவர் ராணா. பாஹுபலி படத்தில் அனுஷ்காவுடன் நடிக்கிறார். இந்த மன்மதனின் கட்டழகுக்கு மயங்காத அனுஷ்கா அவரின் காதல் வலைக்குள் சிக்காமலிருக்க தந்திரத்தை கையாண்டார். தன்னிடம் ராணா பேச வந்தால் உடனே அவரை ‘அண்ணா’ என்று சொல்லி பாசம் காட்டத் தொடங்கிவிடுகிறார். சகோதர பாசத்தில் நெகிழ வைக்கும் அனுஷ்காவிடம் காதல் தந்திரம் பலிக்காததால் அவரும் அதே பாசத்தோடு பழகி அளவுடன் நடந்துகொள்கிறார் என்று யூனிட்டில் இருப்பவர்கள் நக்கலடிக்கின்றனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*