தமிழர் வரலாறை ஆவணப் படுத்த வேண்டியது காலக்கடமை – “தமிழர் களறி” நிறுவனர்கள் “சிவருசி” த. சசிக்குமார், சிவகீர்த்தி (செவ்வி இணைப்பு)

பிறப்பு : - இறப்பு :

news

வரலாற்றுச் சிறப்பு மிக்க இனம் தமிழ் இனம். தொன்மைப் பெருமை கொண்ட இனமாக இருந்தாலும் அதனை நிரூபிப்பதற்கான வரலாற்று ஆவணங்கள் வெகு சொற்பமாகவே இருப்பதாகப் படுகின்றது. இவ்வாறு ஆதாரங்கள் குறைவாக இருப்பதற்கான காரணங்களுள் ஒன்று தமிழர்கள் தமது வரலாற்று ஆவணங்களைப் பேணிப் பாதுகாக்காமையுமே. நவீன யுகத்தில் கூட அதற்கான முயற்சிகள் வெகு சொற்பமாகவே இருந்து வருகின்றன.

இந்த நிலையில் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களில் ஒருசிலர் அதற்கான முயற்சிகளில் இறங்கியிருக்கிறார்கள். சுவிறசர்லாந்து நாட்டின் தலைநகரான பேர்ண் மாநகரில் இருந்து செயற்பட்டுவரும் சைவநெறிக்கூடம் கருவறையில் தமிழில் பூசை, சாதிய வேறுபாடு இன்றி யாவரும் பூசை செய்யலாம், கருவறையில் பெண்களும் பூசை செய்யலாம் எனப் பல முன்னோடித் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வரும் ஒரு அமைப்பு.

தனது திட்டங்களில் ஒன்றாக “தமிழர் களறி” என்ற பெயரில் ஆவணக் காப்பகம் ஒன்றை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.மார்ச் 19 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ள தமது திட்டம் தொடர்பில் அதன் நிறுவனர்களான “சிவருசி” த. சசிக்குமார், சிவகீர்த்தி ஆகியோர் கதிரவன் உலாவிற்காக வழங்கிய நேர்காணல்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit