அன்னிய படையெடுப்புக்களினாலேயே வரலாற்று அடையாளங்களை தமிழர்கள் இழந்தார்கள்!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

தேசியக்கட்டுமானங்களுடன் வரலாற்று அடையாளங்களையும் பண்பாட்டு அடையாளங்களையும் கொண்டு வாழ்ந்த தமிழர்கள் அன்னிய படையெடுப்புக்களால் அவற்றை இழக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியது என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மத்திய கல்லூரி மாணவர்களின் மாணவர் பாராளுமன்ற நிகழ்வு நேற்று முன்தினம் மத்திய கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.

இந்த நிகழ்வில் முதன்மை விருந்திரனராக கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

வரலாற்று ரீதியான சரித்திர பூர்வமான பண்பாட்டு அடையாளங்களை கொண்ட தமிழர்கள் தங்களுக்குரிய ஒரு ஆட்சியோடு இந்த மண்ணிலே ஒரு தேச கட்டுமானங்களோடு வாழ்ந்தவர்கள். இவ்வாறு வாழ்ந்தவர்கள் அன்னிய படையெடுப்புக்களால் தங்களுடைய தனித்துவத்தையும் தனித்தேசிய இன அடையாளத்தையும் அவர்கள் இழக்க வேண்டிய ஒரு சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது.

அந்த நிலையில் இருந்து அவர்கள் விடுபட வேண்டுமானால் ஒரு சுயாட்சி உருவாக்கப்பட வேண்டும். அந்த அடிப்படையில் மாணவர்களிடையே கொண்டு வரப்படவேண்டிய பாராளுமன்ற அமைப்பு முறை என்பது ஒரு சுதந்திரமான நேர்மையான அரசியல் தலைமைகளை உருவாக்குவதன் கட்டுகோப்புக்கள் வரலாற்று அடையாளங்களை கொண்ட தமிழர்களுக்கான தனித்துவ அரசியல் அடையாளங்களைத் தருகின்ற புதியவர்கள் உருவாக்குவதற்கும் இந்த மாணவர் பாராளுமன்றங்கள் ஒரு களமாக அமைகின்றன.

எனது அன்புக்குரிய பிள்ளைகளே மாணவர் பாராளுமன்ற மன்றத்தினூடாக நீங்கள் உங்களுடைய ஆளுமை விருத்தியையும் தலைமைத்துவ ஆளுமையை நீங்கள் உருவாக்கிக் கொள்வதோடு தமிழர்களின் தனித்துவ அடையாளங்களை பேணி வரக்கூடிய மனிதர்களாக தமிழ்த் தேசிய உணர்வைக்கட்டி வளர்க்க கூடியவர்களாக எங்கள் இனத்தினுடைய மொழி, கலாச்சார மற்றும் பண்பாட்டு அடையாளங்களை பேணுகின்றவர்களாக நீங்கள் உருவாக்குவதற்கு மாணவர் பாராளுமன்றங்கள் அடித்தளமாக அமைகின்றது.

உலகில் ஒரு பாராளுமன்றம் இயங்க வேண்டும் அதனுடைய பிரதமர், சபாநாயகர், அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுடைய பாராளுமன்ற நடைமுறைகள் அவர்களுக்கு இருக்கின்ற கௌரவாக்கு பரிமாற்றங்கள் அவர்களுக்கு இருக்கின்ற கௌரவ பதவிகளினூடாக மக்களுக்கு ஆற்றுகின்ற பணிகள் மிக முக்கியத்துவம் பெறுகின்றன.

அந்த வகையில் இளவயதில் ஒரு அரசியல் பரிநாமத்தை பெறுகின்ற நல்ல பாக்கியம் இந்த காலகட்டத்தில் உங்களுக்கு இடைத்துள்ளது.

இரு தமிழர்கள் இழந்து போன அரசை, அவர்கள் வாழ்ந்து வந்த வரலாற்றை மீட்டு பார்ப்பதற்கும் நாங்கள் எவ்வாறான ஒரு ஆட்சி முறையை வைத்திருக்கின்றோம்.

நினைத்து கொள்வதற்கும் ஒரு நல்ல சான்றாக இது அமைகின்றது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

குறித்த மாணவர்கள் பாராளுமன்ற அமர்வு நிகழ்வில், அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*