மைத்திரிபால சிறிசேன தமிழ் மக்களுக்கு தரப்போவது என்ன?

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

“எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் என்னை ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுத்தால் கற்றுக்கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஆணைக் குழுவின் (LLRC) பரிந்துரைகளை நிறைவேற்றுவேன்”. 28.11.2014 அன்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியல் மகாநாட்டில் பொது எதிரணிகளின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன கூறினார் !
rajapaksa_llrc_report
சற்றுப் பொறுங்கள் மைத்திரிபால சிறிசேன ஐயா!!

நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் இலங்கையின் இனப்பிரச்சினைக்கு முழுமையான, நிரந்தரத் தீர்வை ஏற்படுத்துமா? இல்லவேயில்லை ஐயா!! அவை அரைகுறையானவை!! ஏமாற்றானவை!!

நல்லிணக்க ஆணைக்குழுவானது இலங்கையின் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்குச் செய்துள்ள பரிந்துரைகளை இலங்கையின் இனப்பிரச்சினைக்கான மூலக்காரணத்தினை (the Root Cause) ஆராய்ந்து அறிவதூடாகத்தான் செய்ய முற்பட்டுள்ளது..

இதனை நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையினது

பந்தி – 8.150 ஊடாக உறுதிப்படுத்த முடிகிறது. அப்பந்தி பின்வருமாறு கூறுகிறது:

“The Commission takes the view that the root cause of the ethnic conflict in Sri Lanka lies in the failure of successive Governments to address the genuine grievances of the Tamil people. The country may not have been confronted with a violent separatist agenda, if the political consensus at the time of independence had been sustained and if policies had been implemented to build up and strengthen the confidence of the minorities around the system which had gained a reasonable measure of acceptance.”

இப்பந்தியின் முதலாவது வசனம் பின்வருமாறு கூறுகிறது:

“The Commission takes the view that the root cause of the ethnic conflict in Sri Lanka lies in the failure of successive Governments to address the genuine grievances of the Tamil people.”

இரண்டாவது வசனம் பின்வருமாறு கூறுகிறது:

“The country may not have been confronted with a violent separatist agenda, if the political consensus at the time of independence had been sustained and if policies had been implemented to build up and strengthen the confidence of the minorities around the system which had gained a reasonable measure of acceptance.”

ஐயா!

இரண்டாவது வசனம் ஆனது, தமிழர்களது வன்செயலூடான தனிநாடு அமைக்கும் கொள்கை தவிர்க்கப்படமுடியாதது என்பதை நல்லிணக்க ஆணைக்குழு மறைமுகமாக ஏற்பதையே காட்டுகிறது.

முதலாவது வசனம்

“The Commission takes the view that the root cause of the ethnic conflict in Sri Lanka lies in the failure of successive Governments to address the genuine grievances of the Tamil people” என்றுள்ளது.

ஐயா! நல்லிணக்க ஆணைக்குழுவானது, இலங்கையின் இனப்பிரச்சினைக்கான மூலக்காரணம் ஆனது இலங்கையில் ஒன்றன்பின் ஒன்றாக ஆட்ச்சிக்கு வந்த அரசுகள் தமிழர்களின் உண்மையான மனக் குறைகளைத் (the genuine grievances) தீர்க்காதமைதான் என்கிறது.

llrc-report-sri-lanka

மைத்திரிபால சிறிசேன ஐயா!

நல்லிணக்க ஆணைக்குழுவின் ” ஆய்வு முறை” பிழையானது! அது தருக்க ரீதியிலானது அல்ல!!
இலங்கையின் இனப்பிரச்சினைக்கான மூலக் காரணத்தை அறிவாதாயின், இலங்கையில் ஒன்றன்பின் ஒன்றாக அட்சிக்கு வந்த அரசுகள் ஏன் தமிழர்களின் உண்மையான மனக்குறைபாடுகளைத் தீர்க்கவில்லை, தீர்க்கமுடியாதுபோனது என்ற கேள்வி எழுப்பப்பட்டு, அதற்கு விடை காணப்படவேண்டும்!
அப்படிக் காணப்படும் விடைதான் இலங்கையின் இனப்பிரச்சினைக்கான மூலக்காரணம் ஆகும்!
இதை விஞ்ஞான ரீதியாக ஆாய்ந்தறிந்தால், இலங்கையின் இனப்பிரச்சினைக்கான மூலக்காரணம் ஆனது, சிங்கள தேசத்தின் ”ஆரியன்” – சிங்களம் – சிங்களவர் – தேரவாத பௌத்தம் – லங்கா என்ற ஒன்றுக்கு ஒன்று என்ற அடிப்படையிலான கோட்பாட்டின் அடிப்படையிலான சிங்கள – தேரவாத பௌத்தத் தேசியவாதமும், அதன் அடிப்படையிலான கொள்கைகளும், செயற்பாடுகளும் என்பதை அறியமுடியும்.

ஐயா பெருந்தகையே!

ஐ. நாவின் நிபுணர் குழு அறிக்கையும் இலங்கையின் இனப்பிரச்சினைக்கான மூலக்காரணத்தை அதனது அறிக்கையின் பந்தி – 28இலும் பின்வருமாறுதான் கூறியுள்ளது:

“After independence, political elites tended to prioritize short-term political gains, appealing to communal and ethnic sentiments, over long-term policies, which could have built an inclusive state that adequately represented the multicultural nature of the citizenry. Because of these dynamics and divisions, the formation of a unifying national identity has been greatly hampered. Meanwhile, SINHALA-BUDDHIST NATIONALISM GAINED TRACTION, ASSERTING A PRIVILEGED PLACE FOR THE SINHALESE AS THE PROTECTORS OF SRI LANKA, AS THE SACRED HOME OF BUDDHISM. THESE FACTORS RESULTED IN DEVASTATING AND ENDURING CONSEQUENCES FOR THE NATURE OF THE STATE, GOVERNANCE AND INTER-ETHNIC RELATIONS IN SRI LANKA.”.

இந்த நிலையில் ஐயா! சிங்கள தேசத்தின் கற்பனையான, பிழையான ”ஆரியன்” – சிங்களம் – சிங்களவர் – தேரவாத பௌத்தம் – லங்கா என்ற ஒன்றுக்கு ஒன்று என்ற அடிப்படையிலான கோட்பாட்டின் அடிப்படையிலான சிங்கள – தேரவாத பௌத்தத் தேசியவாதத்தினைச் சிங்கள தேசம் எழுத்திலும், செயற்பாட்டிலும் முற்றாக நிராகரிக்க வைக்கவும், அவற்றை மீளப் புகுத்த முடியாதபடி தடுக்கவும் தேவையான அனைத்தையும் சட்டமூலம் செய்வதே இலங்கையின் இனப்பிரச்சினைக்குத் தீர்வாக அமையும்.

மேலும், இலங்கையின் சகல இலக்கியங்களும், தமிழகத் தமிழ் இலக்கியங்களும், இலங்கையின் சகல தொல்பொருட்களும் விஞ்ஞான ரீதியாக மீளாய்வு செய்யப்பட்டு, சிங்கள தேசத்தின் ”ஆரியன்” – சிங்களம் – சிங்களவர் – தேரவாத பௌத்தம் – லங்கா என்ற கோட்பாடு பிழையானது, ஆதாரபுர்வமற்றது என்ற உண்மையானது இலங்கைப் பிரஜைகள் அனைவருக்கும், பாடசாலை, பல்கலைக் கழகக் கல்வியுடாகவும், ஊடகங்களுடாகவும், விளக்கப்படவேண்டும்.

இவைகளை யெல்லாம் செய்யாது, தாங்கள் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை மாத்திரம் நடைமுறைப்படுத்த முற்படுவது, இலங்கையின் இனப்பிரச்சினைக்கு முழுமையான, நிரந்தரத் தீர்வை தாங்களும், தாங்கள் சார்ந்த பொது அணியும் காணும் நோக்கமற்றவை என்பதைத்தான் அசைக்கமுடியாதபடி எடுத்துக்காட்டுகின்றது.

DelegationtLLRC_0021

சுருங்கக் கூறினால், சுதந்திர காலம் தொட்டு ஆட்சிக்கு வந்த அரசுகள் செய்து வந்தவைகளையே தாங்களும், தாங்கள் அங்கத்துவம் வகிக்கும் பொது அணியும் இந்தத் தேர்தலின் பின்னர் செய்யவுள்ளீர்கள் என்பதே உறுதியாகிறது!

மனோ கணேசன் ஐயாவே!
தமிழ்த் தேசியக் கூட்மைப்பினரே!!
இஸ்லாமியத் தலைவர்களே!!!

நீங்கள் பொது அணியில் போட்டியிடும் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு அளிப்பது, மற்றுமொரு தடவை இலங்கையின் சிறுபான்மையினரை ஏமாற்றுவதாகவும், உங்களதும், நீங்கள் சார்ந்தவர்களதும் நலன்கள் கருதி, இலங்கையை முழுமையாகச் சிங்கள தேரவாத பௌத்த நாடாக ஆக்குவதை மறைமுகமாக ஆதரிப்பதாகவும்தான் இருக்கும்!!

நன்றி அ.உதயகுமார்

-நிலவன்-

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*