இப்படி இருந்தால் எப்படி இந்தியா ஜெயிக்கும்: கோஹ்லியின் குமுறல்!

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

kholi

அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 11 ஓட்டங்களுக்குள் 7 விக்கெட்டுகளை பறிகொடுத்தால் எப்படி ஜெயிப்பது என்று இந்திய அணியின் தலைவர் விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார்.

புனேவில் இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலியா அணி 333 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபாரவெற்றி பெற்றது.

இது குறித்து இந்திய அணியின் தலைவர் விராட்கோஹ்லி கூறுகையில், இரண்டு இன்னிங்ஸிலும் தங்களுடைய துடுப்பாட்டம் சொதப்பிவிட்டது. எங்களது திறமைகேற்ப நாங்கள் விளையாடவில்லை என்றே கூற வேண்டும் என்று கூறியுள்ளார்.

சில மாதங்களாகவே சிறப்பாக அணியாக வலம் வந்த தங்கள் அணி, தற்போது நடைபெற்று முடிந்த டெஸ்டின் இரண்டு இன்னிங்சிலும் நான்கைந்து வீரர்கள் ஒரே மாதிரியாக தவறாக கணித்து ஆட்டம் இழந்தது அரிதாக நடக்கக்கூடிய ஒன்று என கூறியுள்ளார்.

மேலும் இது போன்ற ஆடுகளங்களில் எப்படி துடுப்பாட்டம் செய்யக்கூடாது என்பதற்கு எங்களது ஆட்டத்தை உதாரணமாக சொல்லலாம் என்று கூறியுள்ளார்.

குறிப்பாக தற்போது முடிந்த டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலியா அணியின் தலைவர் ஸ்டீவன் சுமித்துக்கு எதிராக மட்டும் 5 கேட்சுகளை நழுவ விட்டோம், அதுமடுமின்றி துடுப்பாட்டத்தில் 11 ஓட்டங்களுக்குள் 7 விக்கெட்டை பறிகொடுப்பது என்று வரிசையாக இருந்தால் எப்படி ஜெயிப்பது என்று கூறியுள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit