1 பந்தில் 6 ஓட்டம் அடித்த பொல்லார்டு : அந்தரத்தில் பறந்து கேட்ச் பிடித்து அசத்திய சங்ககாரா!-(Video)

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

பாகிஸ்தானில் நடைபெற்ற பிஎஸ்எல் பிரீமியர் லீக் போட்டியில் கடைசி ஓவரின் கடைசி பந்தில் கிரன் பொல்லார்டு சிக்ஸர் அடித்து கராச்சி கிங்ஸ் அணிக்கு திரில் வெற்றிக்கு வழிவகுத்தார்.

பாகிஸ்தானில் பிஎஸ்எல் பிரிமியர் லீக் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் 18 வது ஆட்டத்தில் கராச்சி கிங்ஸ் அணியும், லாகூர் குவலாண்டர்ஸ் அணியும் மோதின. இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய லாகூர் குவலாண்டர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 வது ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 155 ஓட்டங்கள் எடுத்து அசத்தியது.

லாகூர் குவலாண்டர்ஸ் அணி சார்பில் அதிகபட்சமாக பிராண்டன் மெக்குல்லம் 31 ஓட்டங்களும், மொகமத்ரிஷ்வான் 32 ஓட்டங்களும் எடுத்தனர்.

கராச்சி கிங்ஸ் அணி சார்பில் சோயிப் மாலிக் மற்றும் உஷ்மா மிர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினர்.

இதைத் தொடர்ந்து வெற்றி இலக்கை எட்டுவதற்கு இரண்டாவது துடுப்பெடுத்தாடிய கராச்சி கிங்ஸ் அணிக்கு துவக்க வீரர் பாபர் அசாம் 49 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார், அடுத்து வந்த வீரர்கள் அனைவரும் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழக்க கராச்சி கிங்ஸ் அணியின் தோல்வி உறுதி என்று கூறப்பட்டது.

ஆனால் அதிரடி ஆட்டக்காரரான கிரன் போல்லார்டு ஆட்டத்தை தலை கீழாக மாற்றி விட்டார். ஒரு புறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும், தன்னுடைய அதிரடியை காட்டி அணியின் எண்ணிக்கை சீரான இடைவெளியில் உயர்த்தினார்.

இதனால் கடை ஓவரில் ஆட்டம் சூடுபிடிக்க ஆரம்பித்தது. கடைசி இரண்டு பந்தில் அணியின் வெற்றிக்கு 10 ஓட்டங்கள் தேவைப்பட்டது. கடைசி ஓவரின் ஐந்தாவது பந்தை யாமின் வீச, இதை எதிர் கொண்ட பொல்லார்டு சிக்ஸர் அடிக்க, கடைசி பந்துக்கு நான்கு ஓட்டங்கள் தேவைப்பட்டது.

இதில் யார் வெற்றி பெறப்போகிறார்கள் என்று அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்க, கடைசி பந்தை எதிர்கொண்ட பொல்லார்டு மீண்டும் சிக்ஸர் அடித்து வெற்றி பெற வைக்க மைதனாத்தில் ரசிகர்களின் ஆரவாரம் செய்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

கடைசி வரை களத்தில் நின்று ஆடிய பொல்லார்டு 20 பந்தில் 45 ஓட்டங்கள் எடுத்து கராச்சி கிங்ஸ் அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.

மேலும் இப்போட்டியின் முதல் ஓவரில் அமிர் வீச, இதை எதிர் கொண்ட டெல் போர்ட் லெக் திசையில அடித்து ஆட, பந்தானது கீப்பருக்கு சற்று விலகிச் செல்ல, கீப்பராக நின்ற சங்ககாரா யாரும் எதிர்பாராதவிதமாக அந்தரத்தில் பறந்து கேட்ச் பிடித்து அசத்தினார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*