கபாலி ஸ்டைலில் களமிறங்கும் டோனி: வைரலாகும் புகைப்படம்!

பிறப்பு : - இறப்பு :

இந்திய கிரிக்கெட் அணியின் கூல் தலைவரான மகேந்திரசிங் டோனி தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கபாலி படத்தில் தன்னுடைய தாடி எப்படி வைத்திருந்தாரோ அதே போன்று வைத்துள்ளது போன்று தொடர்பான புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்திய அணி தற்போது அவுஸ்திரேலியா அணியுடன் டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற டோனி, தனது குடுப்பத்தாருடன் பொழுதுபோக்கி வருவார்.

இந்நிலையில் டோனி விஜய் ஹசாரே தொடரில் இளைஞர்களை ஊக்கப்படுத்தும் விதமாக பங்கேற்கிறார்.

இத்தொடருக்கான போட்டி இன்று தொடங்கவுள்ளது. இப்போட்டியின் பங்கேற்பதற்காக இந்திய அணி வீரர் டோனி உட்பட ஜார்கண்ட் வீரரகள் பலர் பயிற்சியில் ஈடுபட்டனர்.

அப்போது டோனி சால்ட் அண்ட் பெப்பர் ஸ்டைலில் வித்தியாசமான கெட்டப்பில் தோன்றி அசத்தினார்.

இதுவரை நீளமான முடியுடனும், மொட்டையடித்த தலையுடனும் காணப்பட்ட டோனி, தற்போது கபாலி ரஜினி ஸ்டைலில் சால்ட் பெப்பர் லுக்கில் கலக்குகிறார் என்று ரசிகர்கள் உற்சாகமடைந்து வருகின்றனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit