நோர்வேயில் நடைபெற்ற மாவீராநாள் எழுச்சி நிகழ்வு

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

27.11.2014 ஒஸ்லோவில் அமைந்துள்ள கிருஸ்ண சென்ரர் மண்டபத்தில் மதியம் 12;:45 மணிக்கு மிக சிறப்பாக ஆரம்பமாகியது மாவீரர்நாள், இந்நிகழ்வில் மூவாயிரத்திற்கு மேற்ப்பட்ட மக்கள் கலந்து கொண்டனர்.

முதலில் பொதுச்சுடர் ஏற்றப்பட்டதை தொடர்ந்து மாவீரர்களின் உதிரத்தால் உருவாகிய தேசியக்கொடீ ஏற்றப்பட்டது.அதனை தொடர்ந்து தமிழீழ மாவீரர்நாள் அறிக்கையும் தொடர்ந்து உலகத்தில் எந்த மூலையில் வாழந்தாலும் தமிழீழத்தின் விடுதலைக்காக உறுதியோடு உழைப்போமென உறுதிமொமி மக்களோடு சேர்ந்து எடுக்கப்பட்டதை தொடர்ந்து மணி ஒலி மூன்று தடவைகள் ஒலித்ததை தொடர்ந்து வித்தாகி வீழ்ந்த வீரர்களுக்காகவும் இன அழிப்பு செய்யப்பட்ட மக்களுக்காகவும் அகவணக்கம் செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு மாவீரக்கடவுள்களை போற்றி வணங்கும் துயிலும் இல்லப்பாடல் வெண்திரையில் தாயக நினைவுகளை மீட்டியபோது மக்களின் விழிகளில் நீர் முட்டியது. எப்படித்தான் இதயத்தை இறுக்கிப்பிடுத்தாலும் கசியும் கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை என்ற அளவிற்கு உணர்வுகள் மண்ணின் வீரர்களை தேடியது.

மாவீரக்கடவுள்களை மக்கள் மனசார பூசிக்கும் பாடலை தொடர்ந்து மாவீரர் குடும்பத்தினர் தங்கள் பிள்ளைகளுக்கும் சகோதர சகோதரிகளுக்கும் சுடர் ஏற்றி மலர் வணக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து மக்களும் சுடர் ஏற்றி மலர் வணக்கம் செய்தனர் இவற்றோடு இளையவர்களின் கவிவணக்கமும் நோர்வே தமிழர் கலை பண்பாட்டுக் கழக இசைக்குழுவின் மாவீரர்கானமும் மண்டபத்தில் மேலும் உணர்வுகளை உரசியது.

இவற்றை தொடர்ந்து சேர்மனியில் இருந்து சிறப்பு விருந்தினராக வருகை தந்திருந்த பாஸ்கரமூர்த்தி அவர்களின் சிறப்புரை இடம்றெ;றது சிறப்புரையில் அவர் இளையோர்களின் மாவீரர்நாளுக்கான பங்களிப்பை பார்த்து 2008 ஆண்டு மாவீரர்நாள் உரையில் தேசியத்தலைவர் இளையோர்கள் பற்றி குறிப்பிட்ட வார்த்தைகள் மெய்பித்து நிற்பதை தான் கண்ணூடாக காண்பதாக குறிப்பிட்டிருந்தார்.

nor10

nor8

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*