இலங்கை அகதிகளை பின் தொடரும் புலனாய்வு பிரிவினர்!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

அமெரிக்காவின் மிகப் பெரிய புலனாய்வு நடவடிக்கைகளை உலகத்திற்கு வெளியிட்ட அந்நாட்டின் முன்னாள் புலனாய்வு அதிகாரி எட்வர்ட் ஸ்னோவ்டனுக்கு ஹொங்கொங்கில் தங்குமிட வசதிகளை வழங்கியதை அடிப்படையாக கொண்டு, புலனாய்வுப் பிரிவினர் தம்மை பின் தொடர்வதாக ஹொங்கொங்கில் தங்கியிருக்கும் இரண்டு இலங்கை அகதிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

இலங்கை குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகள் ஹொங்கொங் சென்று இவர்களை தேடிப்பார்த்துள்ளதாக தாம் நம்புவதாக அகதிகளின் சட்டத்தரணிகள் செய்தி சேவைகளிடம் கூறியுள்ளனர்.

எவ்வாறாயினும் இதனை இலங்கை பொலிஸார் முற்றாக மறுத்துள்ளனர்.

சீனா அல்லது வேறு நாடு ஒன்றின் சட்டத்தை அமுல்படுத்தும் அதிகாரிகளுக்கு ஹொங்கொங்கில் நீதித்துறையின் அதிகாரத்தை பயன்படுத்த முடியாது.

இலங்கை குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகள் இருவர் கடந்த டிசம்பர் மாதம் ஹொங்கொங்கிற்கு வந்து தமது தரப்பு வாதிகள் குறித்து தேடிப்பார்த்துள்ளதாக தாம் நம்புவதாக இலங்கையர்கள் சார்பில் வாதிடும் ரொபர்ட் டிப்போ என்ற சட்டத்தரணி கூறியுள்ளார்.

எனினும் இந்த குற்றச்சாட்டு முற்றாக உண்மைக்கு புறம்பானது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரியந்த ஜயகொடி தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் தேசிய புலனாய்வு முகவர் அமைப்புக்கு சொந்தமான ஆயிரக்கணக்கான ஆவணங்களுடன் 2013 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஸ்னோடன், அமெரிக்காவில் இருந்து தப்பிச் சென்று ஹொங்கொங்கில் இரண்டு வார காலம் தங்கியிருந்தார்.

இலங்கை அகதிகளான தமது தரப்பு வாதிகள் ஸ்னோடனுக்கு இரண்டு வாரங்கள் தங்குமிடம் மற்றும் உணவு வசதிகளை ஏற்பாடு செய்து கொண்டுள்ளதாகவும் சட்டத்தரணி கூறியுள்ளார்.

இரண்டு வாரங்களின் பின்னர் ஸ்னோடன் ஹொங்கொங்கில் இருந்து மொஸ்கோ புறப்பட்டுச் சென்றுள்ளார்.

கே. சுபுன் திலின மற்றும் டி. அஜித் புஷ்பகுமார என்ற இந்த இலங்கை அகதிகள் ஸ்னோடன் என்ற பெயரில் புதிதாக தயாரிக்கப்பட்ட திரைப்படம் ஒன்றை அடுத்து உலகிற்கு தெரியவந்தனர்.

இதனையடுத்து இலங்கை அரசாங்கம் இந்த அகதிகள் குறித்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக நம்புவதாகவும் சட்டத்தரணி டிப்போ குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாக தமது பாதுகாப்பு குறித்து தாம் கவலையடைந்துள்ளதாக இலங்கை அகதிகள் கூறியுள்ளதாகவும் அவர்களின் சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*