கூகுள் நிறுவனத்துக்கு எதிராக லண்டனில் வழக்கு!

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

26-gookl

மக்களின் தனிப்பட்ட வாழ்க்கை சம்பந்தப்பட்ட தகவல்களுக்கு இணையதளங்களில் உள்ள பாதுகாப்பது தொடர்பில் முக்கிய விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய வழக்கொன்று லண்டன் மேல்நீதிமன்றத்தில் இன்று நடக்கின்றது.
பிரிட்டிஷ் வர்த்தகரான டேனியல் ஹெக்லின் கூகுள் நிறுவனத்துக்கு எதிராக இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளார்.
தன்னைப் பற்றி ஒருவர் இணையத்தில் அவதூறாக எழுதியுள்ள தகவல்கள் இங்கிலாந்திலும் வேல்ஸிலும் இணையத்தின் தேடல் தளங்களில் தொடர்ந்தும் வெளிப்பட்டுவருவதை தடுக்கும் முயற்சியாக அவர் இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளார்.
தங்களிடம் கோரிக்கை வைக்கப்பட்டால், அந்த பக்கத்தின் இணைப்புகளை அகற்றுவதற்கு தயாராக இருப்பதாக கூகுள் தெரிவித்துள்ளது.ஆனால், தாமாகவே முன்வந்து அவ்வாறான துஷ்பிரயோகமான தகவல்களை அகற்ற வேண்டும் என்றோ -மற்றவர்களைப் பற்றி அவதூறாகவோ அச்சுறுத்தும் விதத்திலோ தகவல் வெளியிடுவோரை பொறுப்பாளிகள் ஆக்க வேண்டும் என்றோ தாங்கள் கருதவில்லை என்றும் கூகுள் நிறுவனம் கூறியுள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit