மலிங்கா..முஸ்தபிசுர் ரஹ்மானாக மாறிய தமிழன்: நடராஜனின் தலையெழுத்தை மாற்றிய சூப்பர் ஓவர்!-(Video)

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

tamilan

பஞ்சாப் அணிக்காக 4 கோடிக்கு வாங்கப்பட்டுள்ள தமிழக வீரர் நடராஜன் தொடர்பான வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்தியாவில் ஆண்டுதோறும் நடக்கும் ஐபிஎல் போட்டிகள், இந்த ஆண்டு வரும் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது.

இதற்கான வீரர்களின் ஏலம் தான் தற்போது விளையாட்டு உலகில் பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது.

அதிலும் குறிப்பாக இங்கிலாந்து வீரர்கள சிலர் அதிகத்தொகைக்கு வாங்கப்பட்டுள்ளனர். இதற்கு அடுத்தாற்போல் தமிழகத்தைச் சேர்ந்தவரும் இடக்கை பந்துவீச்சாளருமான நடராஜன் பஞ்சாப் அணிக்காக 3 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளார்.

இவரை அடையாளம் காண்பித்து கொடுத்தது தமிழ்நாட்டில் நடந்த TNPL தான். இந்த TNPL தொடருக்கு கிரிக்கெட் ஜாம்பவான்கள் பலரும் வந்திருந்தனர். குறிப்பாக சொல்லவேண்டுமென்றால் அவுஸ்திரேலியா வீரர் ஹைடன் வந்திருந்தார்.

நடராஜனில் பந்துவீச்சை பார்க்கும் போது, வங்கதேச அணியின் வேகப்பந்து வீச்சாளரான முஸ்தபிசுர்ரஹ்மான் போன்று இருப்பதாக ஹைடன் உட்பட முன்னனி கிரிக்கெட் வீரர்கள் பலரும் கூறினர்.

அதிலும் யார்க்கர் ஸ்பெஷலிஸ்ட் ஆன நடராஜன், இலங்கை வீரர் மலிங்காவை போன்று யார்க்கர் வீசி வருவதாக கூறிவந்தனர்.

இந்நிலையில் ஏலத்துக்கு முன்பு நடராஜனின் அடையாளமாகத் திகழ்ந்தது ஒரு சூப்பர் ஓவர். TNPL டி20 போட்டியில் திண்டுக்கல் அணிக்கு எதிராக 13 ஓட்டங்கள் எடுக்கவேண்டிய தூத்துக்குடியால் 5 ஓட்டங்கள் மட்டுமே எடுக்கமுடிந்தது. அதில் 6 பந்துகளும் யார்க்கர் வீசி இலங்கை வீரர் மலிங்காவை ஞாபகப்படுத்தினார் நடராஜன்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit