கேப்பாபுலவு போராட்டத்தினை சர்வதேசத்திற்கு கொண்டும் செல்லும் புலம்பெயர் இளையோர்கள், மக்கள்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

முல்லைத்தீவு கேப்பாப்புலவு மக்கள் தங்களின் சொந்த நிலங்களில் நிலை கொண்டிருக்கும் படையினரை அங்கிருந்து வெளியேற்ற வேண்டும் எனக்கோரி கடந்த 20 நாட்களாக தொடர்ச்சியான கவனயீர்ப்புப் போராட்டத்தினை நடத்தி வருகின்றனர். மக்களின் நியாயமான கோரிக்கைக்குச் செவி சாய்க்காமல் நல்லாட்சி அரசாங்கம் என தம்மைத்தாமே கூறும் அரசாங்கம் கண்டுகொள்ளாமல் இருக்கின்றது. பல மிரட்டல்களுக்கு மத்தியிலும் இலங்கை இராணுவ புலனாய்வாளர்களின் அச்சுறுத்தல்கள் மத்தியிலும் மிக மோசமான நிலையில் இருந்து கொண்டு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.

கடந்த தை மாதம் 31ஆம் திகதி தொடக்கம் நடக்கும் இவ் போராட்டத்துக்கு வலுச்சேர்க்கும் முகமாக புலத்திலும் ஈழத்திலும் பல்வேறு தொடர் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. எமது சொந்த மண்ணில் இருந்து விமானப்படையை வெளியேற்றக்கோரி எம் மக்கள் அவர்களின் பிள்ளைகளுடன் இராணுவ முகாமிற்கு முன்னால் இருந்து நடத்தி வரும் போராட்டத்திற்கு எம்மாலான அனைத்து உதவிகளையும் புலம்பெயர் மக்கள் செய்து வருகின்றனர்.

kopulavu-sm-3

kopulavu-sm-2

kopulavu-sm-1

கேப்பாபுலவில் உள்ள மாணவர்கள் கடந்த இருபது நாட்களாக வீதி ஓரங்களிலும் வயல்வெளிகளிலும் வாழ்ந்துவருகின்றனர். கடும் பனியிலும் கடுமையான வெயிலிலும் பிள்ளைகள் பாடசாலைக்குச் செல்லமுடியாமல் போராட்டம் நடக்கும் இடத்திலேயே தமது படிப்பினை தொடர்கின்றார்கள்.

மைத்திரி, ரணில் அரசாங்கமானது சர்வதேசத்திலிருந்து வரும் எதிர்ப்புகளை எதிர்கொள்ளமுடியாமல் அவர்களுக்கு போலி வாக்குறுதிகளை அள்ளி வழங்கியபடி ஈழ மண்ணில் மீண்டும் முள்ளிவாய்க்கால் போல் மறைமுக போரை எம் மக்கள் மீது திணித்து வருகின்றது. தாயகத்தில் அனைத்து இடங்களிலும் பாடசாலை மாணவர்கள் தொடக்கம் சாதாரண மக்கள் வரை இப் போராட்டத்திற்கு குரல்கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

இந்த நேரத்தில் அவர்களின் இப் போராட்டத்தினை சர்வதேசத்திற்கு கொண்டுசெல்லவேண்டியது எமது கடமையாகும். அதன் ஒரு பகுதியாக சமூகவலைத் தளங்களிலான போராட்டம் ஒன்றை நாம் முன்னெடுக்கவுள்ளோம். இச் சமூகவலைப் போராட்டத்திற்கு தங்களையும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் வேண்டி நிற்க்கின்றோம்.

காலம் : 23.02.2017
நேரம் : 18மணி (பிரித்தானிய நேரம்)

JOIN WITH US ON OUR SOCIAL MEDIA CAMPAIGN
FREE OUR LAND

#VoiceGenocide
#OurBloodOurLand
#FreeOurLand
#Keppapulavu
#FreeTamileelam

தமிழ் இளையோர் அமைப்பு
பிரித்தானியா

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*