நாவற்காட்டில் கல்வி பிரிவு ஆரம்ப விழா.

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

கல்வியால் எதிர்காலத்து சவால்களை வெற்றிகொள்ளும் ஓர் புதிய சமூகமாக நமது தமிழினம் மாற்றமடையவேண்டும் – ஆரம்ப விழாவில் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்த கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் தெரிவித்தார்…

யாழ்ப்பாணம் தென்மராட்சி பிரதேச செயலகத்திற்குட்பட்ட வரணி நாவற்காடு கிராமத்தில் கிராம அபிவிருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் அமரர் சின்னத்தம்பி வேதாரணியம் அவர்களது ஞாபகார்த்த கணனி கற்கை கல்வி பிரிவு ஆரம்ப விழா 21/02/2017 செவ்வாய் மாலை 3:30 மணியளவில் நாவற்காடு சன சமூக நிலையத்தில் இடம்பெற்றது.

நிகழ்விற்கு வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களும், கணனித்தொகுதிகளை அன்பளிப்பு செய்த திருமதி சின்னத்தம்பி வேதாரணியம் அவர்களும், கிராம அலுவலகர் மற்றும் கிராம, மாதர் கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், கமக்காரர் அமைப்பினர் ஆகியோர் கலந்துகொண்டனர், நிகழ்வினை நாவற்காடு கிராம அபிவிருத்தி சங்கத்தின் தலைவர் கு.சபீசன் அவர்கள் தலைமையேற்று நடத்தினார்.

நிகழ்வில் அமைச்சர் அவர்கள் தனது உரையில், இவ்வாறான மாணவர்களை ஊக்குவிக்கும் செயல்திட்டத்தை ஆரம்பித்து வைப்பதில் தாம் பெரும் மகிழ்வடைவதாகவும், கல்வியால் எதிர்காலத்து சவால்களை வெற்றிகொள்ளும் ஓர் புதிய சமூகமாக நமது தமிழினம் மாற்றமடையவேண்டும் என்று அங்கு வலியுறுத்தியதோடு, எனது மக்களாகிய நீங்கள் என்னிடம் முன்வைத்துள்ள கோரிக்கையின் அடிப்படையில் கடந்த ஆண்டு 06 மில்லியன் நிதியை ஒதுக்கி சுட்டிபுரம் மிருசுவில் வீதியின் கணிசமான தூரத்தை செய்து தந்திருந்தேன், அதே போல இந்த ஆண்டு நிதியில் இருந்து 02 மில்லியன் நிதி ஒதுக்கித்தந்துளேன் ஆகவே அதன்மூலமாக இன்னும் ஒரு தொகுதி வீதி புனரமைக்கப்படும் அதனைத்தொடர்ந்து இந்த ஆண்டின் நடுப்பகுதியில் ஐ வீதி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் பூரணமாக இந்த வீதி உங்களது பாவனைக்கு புனரமைக்கப்பட்டு வழங்கப்படும் என்று சந்தோஷமான ஓர் வாக்குறுதியையும் கூறினார்.

இவ்வாறு கற்றல் நடவடிக்கைக்கு முன்னுரிமை வழங்கும் நோக்கோடு மாணவச் செல்வங்களது எதிர்காலம் பிரகாசிக்க வேண்டும் என்ற முயற்சியோடும் குறித்த திட்டத்தை ஆரம்பித்துள்ள கிராம அபிவிருத்தி சங்கத்திற்கு தனது 2017 ஆம் ஆண்டிற்கான நிதியில் இருந்து ரூபாய் ஜன்மபதுனாயிரம் தருவதாகவும் தெரிவித்து, மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்தினர் தங்களுக்கு வருமானத்தை ஈட்டிக்கொள்ளும் ஓர் செயல்திட்டத்தை தருகிற சந்தர்ப்பத்தில் அவர்களது அபிவிருத்திக்கும் கிராம அபிவிருத்தியூடாக நிதியை ஒதுக்கித்தர தாம் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

இறுதியாக கணனி கல்விப்பிரிவு ஆரம்பிக்கும் முகமாக அனைத்து மாணவர்களும் அமைச்சர் மற்றும் கணனிகளை அன்பளிப்பு செய்த அம்மையார் ஆகியோர் இணைந்து ஆரம்பித்துவைத்தனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*