நீ பிறந்தமண்ணில் பிறந்ததே பெருமை எமக்கு

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

உலகத்தின் எத்தனையோ நாடுகளில் மக்கள் மூடநம்பிக்கைக்குள்ளும் அடிமைத்தனத்துள்ளும் அகப்பட்டு முன்னேற்றமடைவதற்கோ முடியாதவர்களாக உணவுக்காக மட்டும் உழைப்பதும் உழைத்ததை உண்பதும் இனப்பெருக்கம் செய்வதும் என்று மனிதமந்தைகளாக வாழ்ந்தார்கள் என்ற சரித்திரம் உள்ளது.

ஆனால் அப்படி வாழ்ந்த மக்களின் இன்றய வாழ்க்கை எப்படி இருக்கின்றது அவர்கள் இப்போது எப்படி வாழ்கின்றார்கள் என்று பார்த்தால் உலகத்தில் நாகரிகம் மிக்கவர்களாகவும் அறிவாளிகளாகவும் எத்தனையோ சட்டதிட்டங்களை உருவாக்கியவர்களாகவும் எங்கும் சுதந்திரமாக நடமாடக்கூடிய வல்லமை மிக்கவர்களாகவும் மாறியுள்ளமை தெளிவாகும் .எப்படி இந்த மாற்றம் ?மந்தைக்கூட்டங்களாக வாழ்ந்துகொண்டிருந்த மனிதர்கள் எவ்வாறு இப்படி ஒருநல்ல நிலையினை அடைந்தார்கள் அந்த மாற்றத்தினை செய்தது யார் ? என்ற வினா எழும்போது அதற்கு ஒரே பதில் அவர்களுக்கு கிடைத்த தலைமைஎன்பதேயாகும்

ltte leader
நல்ல மனிதர்களின் பிறப்பினால்தான் ஒரு சமூகமே விழித்துக்கொள்கின்றது விடுதலையடைகின்றது இதேபோலத்தான் ஈழமண்ணிலே அழியப்போகும் தனது இனத்தினை காப்பாற்ற தமிழினத்தின் நீதிக்காகவும் நியாயத்திற்காகவும் போராட 1954ஆம் ஆண்டு கார்திகைமாதம் வீரத்தமிழ்மகன் உலகத்தமிழினத்தின் ஒப்பற்ற தலைவன் அதிமேதகு வே.பிரபாகரன் அவர்கள் வல்வெட்டித்துறையிலே பிறந்தார். பிரபாகரன் வல்வெட்டித்துறையில் ஊரிக்காடு எனும் இடத்திலுள்ள சிதம்பரா கல்லூரியில் 10ம் வகுப்பு வரையிலும் கற்றார். தமிழ் மாணவர்கள் பாடசாலைக் கல்வியை முடித்தபிறகு மேற்படிப்புக்குச் செல்ல இலங்கை அரசின் மேற்கல்வி தரப்படுத்தல் கொள்கை ஒரு தடையாக இருந்தது. 10ம் வகுப்புவரையிலும் படித்த பிரபாகரன் விடுதலைப் போராளியாகச் செயற்படத் தொடங்கி விட்டதனால் படிப்பைத் தொடரவில்லை. பக்கத்துவீட்டு நிலவரம்கூடதெரியாத சிறுபிள்ளைகளாக அனேகமான பிள்ளைகள் வாழ்ந்துகொண்டிருக்கும்போது தன் இனம் படும் வேதனைகளையும் சிங்களப்பேரினவாத அரசினால் தன் இனம்அடக்கியாளப்படுகின்றது என்பதனையும் புரிந்துகொள்வதற்குக்கூட பக்குவமில்லாத அந்த பதினைந்து வயதிலேயே. பேராடவேண்டும் தன் இனத்தினைசிங்களப்பேரினவாதிகளிடம் இருந்து மீட்டெடுக்க வேண்டும் என்ற எண்ணம் எவ்வாறு உருவாகியது.

அரசகுடும்பத்தில் அல்லாது சாதாரண குடும்பத்தில் பிறந்துதனது பதினைந்து வயதிலேயே தன் இனத்திற்காக ஒருவன் போராடப்புறப்பட்டான் என்பதும் தானாகவே ஒரு விடுதலை அமைப்பினை உருவாக்கினான் என்பதுஉலகத்தில் வரையப்படாத வரலாறு. அதிசயிக்கத்தக்க விடயம் ஆதாலால்த்தான் உலகத்தமிழினத்தின் ஒப்பற்றதலைவனாக பிரபாகரனை தமிழினம்ஏற்றுக்கொண்டுள்ளது. பிரபாகரன் அவர்களின் போக்கு அவரது பெற்றோருக்குப் புரியவில்லை. ஒருநாள் காவல்துறை பிரபாகரனை தேடி முதன்முதலில் அதிகாலை 3 மணிக்கு வீடுவந்த போதே அவர்களால் அறிந்து கொள்ள முடிந்தது. காவல்துறையினரிடம் இருந்து தப்பிச் சென்ற பிரபாகரன் அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு தன் வீட்டிற்குத் நிரந்தரமாக திரும்பவே இல்லை பதினைந்து வயதிலே தாய் தந்தையின் அரவணைப்பிலே உறங்கவேண்டிய அந்தச்சின்னஞ்சிறு பிள்ளை தலைமறைவுப்போராளியாக மாறியது.

தன் இனத்திற்காக அதற்காக எத்தனையோ பழிகளையும் பயங்கரவாதி என்ற பட்டத்தினையும் இன்றுவரைக்கும் சுமந்துகொண்டிருக்கின்றான்அந்த உத்தமபுத்திரன். பிரபாகரன் சிறுவனாக இருந்தபோது 1958 ஆம் ஆண்டில் நடந்த தமிழர் இன அழிப்பில் நிகழ்ந்த பயங்கர சம்பவங்கள் அவர் மனதில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தின. சிங்கள இனவெறியரால் ஈழத்தமிழர்கள் கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்பவங்களை அவர் கேள்விப்பட்டார். அவருடைய பெற்றோருக்கு நன்கு தெரிந்த ஒரு விதவைத்தாய் தனக்கு நேர்ந்த துயரச் சம்பவத்தைச் சிறுவனாக இருந்த பிரபாகரனுக்குக் கூறினார். பாணந்துறையில் இந்து குரு ஒருவர் உயிரோடு தீ மூட்டி எரிக்கப்பட்ட சம்பவம் போன்ற கொடூரமான வன்முறைகளை அவர் அறிந்தபோது சிங்கள அரசின் பிடிக்குள்ளிருக்கும் தமிழ் மக்களை மீட்டெடுக்க வேண்டுமென்ற உள்ளுணர்வும் முனைப்பும் அவர் மனதில் உருவாகியது.

நிராயுதபாணிகளான அப்பாவித் தமிழர்களுக்கெதிராக ஆயுத வலிமையைப் பிரயோகிக்கும் இனவெறி அரசினை ஆயுதப் போராட்டத்தின் மூலமே எதிர்கொள்ள முடியும் என்று அவர் முடிவு செய்தார். தாமும் தமது குடும்பமும் வாழ்ந்தால்போதும் என்று சுயநலவாதப்பேய்கள் வாழும் இந்த உலகத்தில் தன் இனம் வாழவேண்டும் என்ற எண்ணம் எல்லோருக்கும் வந்துவிடுவதில்லை ஆனால் அப்படிப்பட்ட உயர்ந்தஎண்ணமும் எல்லோரும் வாழவேண்டும் என்ற சிந்தனையும் எங்கள் தேசியத்தலைவனது எண்ணத்தில் தேன்றிய காரணத்தினால் 1972ல் புதிய தமிழ்ப் புலிகள் என்ற அமைப்பை தனது 18-ஆவது வயதில் பிரபாகரன் தொடங்கினார். மிண்டும் வைகாசி 5/ 1976 இல் புதிய தமிழ்ப்புலிகள் இயக்கம் தமிழீழ விடுதலைப் புலிகள் என்று பெயர் மாற்றப்பட்டது.

”நான் பேச்சுக்கு எப்பொழுதுமே குறைந்த முக்கியத்துவத்தையே தருகிறேன். நாம் செயல் மூலம் வளர்ந்து வந்த பின்தான் பேச ஆரம்பிக்கவேண்டும்.”இது அந்த உத்தமமான தலைவனின் கூற்று இதையே அவர் செயலிலும் காட்டினார்.கூட்டம் கூட்டியவன் வெறும் கூச்சல்போட்டவன் எல்லாம் தலைவனாகமுடியாது ஏழு பேருடன் ஆரம்பிக்கப்பட்ட தமிழீழவிடுதலைப்புலிகள் என்ற இயக்கம் இன்று உலகத்தின் மூலைமுடுக்குகளெங்கும் பரவியுள்ளது எப்படி? அடிவாங்கி அடிவாங்கி அழுதுகொண்டிருந்த தமிழினம் திருப்பி அடிக்கும் வல்லமையினைப்பெற்றது எப்படி? அதில்தான் இருக்கின்றது அந்தத்தலைவனின்தலைமைத்துவம் உன்மையான அற்பணிப்பு நுன்னறிவு வீரம் விவேகம் இன்னும் எத்தனையோ காரணங்கள் கூறிக்கொண்டேபோகலாம். எங்களில் அனேகமானவர்கள் எப்போதும் மற்றவரை குறைகூறிக்கொள்வதிலே காலத்தை கடத்துகின்றோம் ஆனால் எங்கள் தாலைவனோ ‘ஒரு தவறு நடந்தால் பிழைகளை உங்களில் இருந்து தேடுங்கள். மற்றவர்களில் இருந்து தேடாதீர்கள்.’ என்று கூறி மானிடசமூகத்திற்கே வெற்றிக்காண பல வழிகளைக்காட்டியுள்ளார்.

நானே உலகத்தில் உத்தமன் நானே உலகத்தில் உன்னதமானன் என்று பலர் தலையில் அடித்து சத்தியம் செய்யும் அதே நேரம் எங்கள் ஒப்பற்றதலைவன் இவ்வாறு கூறுகின்றான் ‘உண்மையானவராக இருந்தால் அவர் இலட்சியத்திற்காக செத்திருக்க வேண்டும். அல்லது இலட்சியத்தை அடைந்திருக்க வேண்டும். இப்படிப் பார்த்தால் எங்களில் மாவீரர்கள்தான் உண்மையானவர்கள் உயர்ந்தவர்கள் நானும் உண்மையானவனல்லன்.’ என்று தன்னையும் தாழ்த்திக்கொள்வார் இப்படிப்பட்ட மனிதர்கள் உலகத்தில் பிறப்பதினால்தான் என்னவோ இன்னமும் நீதியும் நியாயமும் உயிர்வாழ்கினறது இறந்தவனை புதைத்துவிட்டு அந்தஇடத்தையே மறந்துவிடும் மனிதர்களுக்கு மத்தியிலே ‘வெற்றிகளைப் போராளிகளுக்கு கொடுங்கள். தோல்விகளை நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள்.

‘எதோ ஒருவன் பிறந்தான். வளர்ந்தான், சண்டை பிடித்தான், மடிந்தான் என்றுதான் நாங்கள் வீரச்சாவடையும் போராளிகளைப் பார்க்கிறோம். இந்தநிலை மாறவேண்டும். இவர்கள் நாம் வணங்கும் தெய்வங்களாக போற்றப்படவேண்டும்.’ என்று விடுதைலைக்காக வீழ்ந்துபோன வீரர்களை பூசைக்குரியபுனிதர்களாகவும் அராதனைக்குரிய தெய்வங்களாகவும் மதித்தார் அதனால்தான் இத்தனை வீரர்களும் ஒருவர்பின் ஒருவராக களத்திலே குதித்தார்கள்.

கால்மிதிக்கும் கற்களாகவும் கரும் பாறைகளாகவும் இருந்த தமிழர்களை சிற்பங்களாக செதுக்கிய தலைசிறந்த சிற்பி எங்கள் தலைவன் அச்சம் என்ற சொல்லேஅச்சப்படும் அவனைக்கண்டால் வீரத்தின் மறுவடிவமாக எங்கள் மண்ணிலே அவன் தலைநிமிர்ந்து நின்றபோது அவன் பின்னாலே ஆயிரம் ஆயிரம்போராளிகள் அணிவகுத்துக்கொண்டார்கள் போராளிகளுக்கு அறிவைப்புகட்டும் சிறந்த ஆசானாகவும் பாசத்தினைக்காட்டும் நல்ல நண்பனாகவும்களத்திலே தோளோடு தோள் கொடுத்துநின்றான் தமிழர்கள் என்றால் நாய்கள் என்று நகைபேசிய சிங்களப்பேரினவாதிகள் தமிழர்கள் என்றால் புலிகள் என்று கிலிகொள்ளும் அளவிற்கு ஒவ்வொரு தமிழனையும் தமிழிச்சியையும் வளத்தெடுத்தான் காற்றுக்கூட நுளையமுடியாது என்ற இரும்புக்கோட்டைகளுக்குள் எல்லாம் புலிகளால் நுளைந்துவிடமுடியும் என்று மெய்ப்பித்துக்காட்டினான். ஒன்றா இரண்டா எத்தனையோ வீரதீரச்செயல்களையெல்லாம் நடுக்காடுகளுக்குள் இருந்தபடியே செய்துகாட்டியவீரத்தமிழன் பிரபாகரன் உலகநாடுகளால் அங்கீகரிக்கப்படாத ஒரு சுதந்திரதமிழீழதேசத்தின் தலைவனாகவும் தளபதியாகவும் தமிழினத்தின் விடியலுக்காய் பொறுப்பேற்று போராடினான்.

எத்தனை படையணிகள் எத்தனை உற்கட்டமைப்புக்கள் வியக்கத்தக்க விடயங்களையெல்லாம் எப்படி எங்கள் தலைவனால் மட்டும் சாதரணமாக செய்ய முடிந்தது. தன் நாட்டின் மக்களின் நலனுக்காக எத்தனையோ நல்ல சட்டதிட்டங்களை உருவாக்கினான் நீதி நெறிதவறாது தமிழீழ அரசின் மன்னனாக அவன் அரசாண்ட காலத்தில் அந்த மாவீரனின் ஆட்சியிலே வாழ்ந்தோம் என்பதும் அவன் பிறந்த மன்ணிலே நாம் பிறந்தோம் என்பதும் எமக்குபெருமையும் எம்மையும் அறியாமல் செருக்கினையும் கொடுக்கின்றது. எத்தனையோ நாடுகள் தடைசெய்தும் பயங்கரவாதி என்று முத்திரை குற்றியும் அதையெல்லாம் பொருட்படுத்தாது யாருக்கும் தலைகுனியாது புலிகள் என்றால் அய்யோ அம்மே என்று சிங்களம் இன்றுவரைக்கும் அலறும்படி தமிழீழவிடுதலைப்புலிகளை வளத்தெடுத்தான்.

கடற்புலிகள்
வான்புலிகள்
லெப். கேணல் இராதா விமான எதிர்ப்புப் படையணி
மாலதி படையணி (பெண்புலிகள்)
சோதியா படையணி (பெண்புலிகள்)
அன்பரசி படையணி
சிறுத்தைகள்
கரும்புலிகள்
கடற்கரும்புலிகள்

கேணல் கிட்டுப் பீரங்கிப் படையணி
லெப். கேணல் விக்ரர் கவசவாகன எதிர்ப்புப் படையணி
லெப். கேணல் குட்டிசிறி மோட்டார்ப் படையணி
ஜெயந்தன் படையணி
இம்ரான் பாண்டியன் படையணி
இம்ரான் பாண்டியன் உந்துருளி அணி
எல்லைப் படை
துணைப்படை

என சிங்களப்பேரினவாதத்தின் முதுகெலும்பினை முறிக்கவும் தமிழர்கள் தலைநிமிர்ந்து துணிச்சலுடன் நடமாடவும் இத்தனை படையணிகளையும் உருவாக்கினார். தமிழ்மக்களின் நலனுக்காகவும் தமிழினத்தின் நலனுக்காகவும் ஆட்சி அதிகாரங்கள் யாவும் மக்களை பாதித்து விடக்கூடாது என்பதிற்காகவும் அவரால் எத்தனையோ உட்கட்டமைப்புக்கள் உருவாக்கப்பட்டன

வழங்கற் பிரிவு
மருத்துவப் பிரிவு
கொள்முதல் பிரிவ
பரப்புரைப் பிரிவு
தமிழீழப் பொறியியற்றுறை
வெடிபொருள் தொழில்நுட்பப் பிரிவு
கணிணி தொழில்நுட்பப் பிரிவு
இலத்திரனியல் தொழில்நுட்பப் பிரிவு
போர்கருவித் தொழிற்சாலை
தமிழீழ இராணுவ விஞ்ஞானக் கல்லூரி
விடுதலைப்புலிகளின் ஆங்கிலக் கல்லூரி
திரைப்பட, புத்தக மொழிபெயர்ப்புத் துறை
புலனாய்வுத் துறை

தமிழீழ விடுதகலைப்புலிகளின் அரசியற்றுறை
தமிழீழ விளையாட்டுத் துறை
தமிழீழக் கல்வி மேம்பாட்டுக் கழகம்
தமிழீழக் கலை பண்பாட்டுக் கழகம்
தமிழீழ நீதித்துறை
தமிழீழ நிர்வாக துறை
தமிழீழ நிதித் துறை
தமிழீழ வைப்பகம் (வங்கி)
தமிழீழக்காவல்துறை
விடுதலைப்புலிகளின் சுகாதாரப் பிரிவு
சூழல் நல்லாட்சி ஆணையம்
தமிழீழ வனவளப் பாதுகாப்புப் பிரிவு
தமிழீழப் பொருண்மிய மேம்பாட்டு நிறுவனம்
பொருண்மிய மதியுரையகம்
தமிழீழக் காலநிலை அவதானிப்பு நிலையம்
தமிழீழக் காட்டுமானப் பொறியியற்செயலகம்
வடகிழக்கு மனித உரிமைகள் செயலகம்
ஓளிக்கலைப்பிரிவு (நிதர்சனம் ஒளி வீச்சு)
விடுதலைப்புலிகளின் வெளியீட்டுப் பிரிவு
புலிகளின் குரல் (வானொலி)
விடு தலைப்புலிகள் பத்திரிகை
எரிமலை சஞ்சிகை
தமிழீழத் தேசியத் தொலைக்காட்சி

என இவை யாவும் மக்களின் நலனுக்காகவேதவிர எந்தவிதத்திலும் அது தமிழ்மக்களைப்பாதிப்பதில்லை இப்படி தமிழினத்தின் விடியலுக்காகவும் விடுதலைக்காகவும் போராடி தமிழினத்தின் அடையாளத்தினை உலகிற்கு காட்டிய ஒரு மாபெரும்தலைவன் இந்த காத்திகைமாதத்தில் பிறந்தான் என்பதால் அது கார்த்திகை மாதத்திற்கே பெருமை ஈழத்தமிழர்களுக்கு கிடைத்த பிரபாகரன் என்ற தலைவனைப்போல் தம்மை தலைவன் என்று சொல்லும் எல்லோருமே இருப்பதில்லை .ஆட்சியும் அதிகாராமும் கைகளில் இருக்கும்வரை கிடைத்ததை எல்லாம் சுறுட்டிவிடவேண்டும்என்ற எண்ணத்தில்தான் அதிகமாணவர்கள் தலைவர்களாக ஆசைப்படுகின்றனர்.

LTTE_chief_Prabhakaran
உதரணமாக எமது அண்மையிலே இருக்கும் தமிழகத்தினை எடுத்துக்கொண்டால் தம்மை தலைவர்கள் என்று சொல்லிக்கொள்வோர் அதிகமானவர்கள் இருந்தபோதும் உனமையான தலைவர்களாக மக்களின் நலம்காக்கும் எண்ணத்துடன் இதுவரைஎந்தத்தலைவர்களும் செயற்படவில்லை மக்களைத் தெளிவுபடுத்தவேண்டிய தலைவர்களாலேயே அங்கே மக்கள் ஏமாற்றப்படுகின்றனர் அரசியல் சினிமா என்றஇரண்டு கொடிய நோய்களால் மக்கள்பீடிக்கப்பட்டுமுன்னேறமுடியாதவர்களாக இன்றுவரைக்கும் வாழ்கின்றனர்.

ஆனால் ஈழத்தில் அப்படியல்ல பிரபாகரனால் கொடுக்கப்பட்ட போதனைகளும் அறிவுரைகளும் அடிமட்ட மக்களின் வீடுகள்வரை சென்றடைந்தன ஐந்து வயதுபிள்ளை முதல் ஐம்பது வயது முதியவர்கள் வரை அரசியல் தெளிவுள்ளவர்களாக மாறினார்கள் யாதார்த்தக்களநிலவரங்களை புரிந்து கொண்டு போராடவேண்டும் என்று தாமாகவே முன்வந்தார்கள் ஆயுதம் ஏந்திப்போராடமுடியாதவர்கள் அரசியல் ரீதியாகப்போராடினார்கள் ஏதோ ஒருவகையில் ஒவ்வொரு குடிமகனும் தமது விடுதலைக்காக போராடவேண்டும் என்ற உணர்வினை பெற்றுக்கொண்டார்கள் எதுவந்தாலும் எம் தலைவன் உள்ளான் என்று மலைபோல அந்த மாவீரனை நம்பினார்கள் இறுதியுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் எம் தலைவர் கொல்லப்பட்டதாக அவரது உருவத்தினை ஒத்த உடலினை காட்டி தமிழினத்தின். தலைவனுக்கு புதைக்குழிவெட்டிப்புதைத்துவிட நினைத்தார்கள் ஆனால் அதனை ஒட்டு மொத்த தமிழினமும் மறுத்துவிட்டதே!!

LTTE-chief-V-Prabhakaran
தமது தலைவன்மீது எவ்வளவு நம்பிக்கை இருந்திருந்தால் அவர் செத்துவிட்டதாக அவரின் உடலைப்போல ஒரு உடலை அதுவும் போர் முடிவுக்குவந்த நந்திக்கடல் பகுதியிலே வைத்துக்காட்டியபோதும் அது பொய் என்றும் எமது தலைவனின் தலைமுடியினைக்கூட உங்களால்த்தொடமுடியாது என்று சிங்களதேசத்திற்கு அறைகூவல் விடுத்திருப்பார்கள் உலகத்தமிழர்கள் ஈழத்தீவில் வல்வெட்டித்துறையிலே பிறந்த பிரபாகரன் இந்தியா மலேசியா சிங்கப்பூர் தென்னாபிரிக்கா
அமெரிக்கா ஐரோப்பியா என்று உலகமெங்கும் வாழும் தமிழர்களின் உள்ளங்களிலே நீங்காத இடத்தினைப்பிடித்து உலகத்தமிழர்களின் ஒரே தலைவனாக முடிந்தது அங்கேதான்.

அந்தத்தலைவனின் வீரதீரமும் தியாகமும் உயர்ந்தபண்புகளும் உள்ளன தமது தலைவன் தமக்கான விடுதலையினை பொற்றுக்கிடுக்காதுமரணித்துப்போகமாட்டான் என்ற நம்பிக்கையினை ஒட்டுமொத்த தமிழர்களின் மனங்களிலே ஆழமாக பதியச்செய்தது அந்த தலைவனின் தனித்துவத்தினைவெளிச்சமிட்டுக்காட்டும்

எங்கோ ஒரு தேசத்தில் எங்கள் தலைவன் வாழ்ந்துகொண்டிருகின்றான் என்ற நம்பிக்கையுடன் இன்றுவரை காத்திருக்கின்றது தமிழினம் ஆனால் இதற்கான பதிலை காலம்தான் பெற்றுத்தரவேண்டும் நீதியும் நியாயமும் நிலைத்திருப்பது உன்மையாக இருந்தால் நம்பிக்கையுடன் காத்திருக்கும் தமிழர்கள்
ஏமாந்துபோகமாட்டார்கள் எங்கள் மண்ணைச்சூழ்ந்துகொண்ட சிங்களப்பனி விலக ஈழ மண்ணின் கதிரவன் காரிருளினைக்கிழித்து உதயமாகுவான் வெகுவிரைவிலே

prabhakaran_tamil_tiger_by_govindaraj

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*