மட்டக்களப்பு மண்ணின் மைந்தன் யோகேஸ்வன் ஐயாவும், ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில் அருட்சுனையர் சிவருசி த.சசிக்குமார் ஐயாவும் இணைந்து கற்பிட்டியில் தமிழ் மக்களை நேர்கண்டு குறை களைந்தனர்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

உலகில் நாங்கள் எங்கு வாழந்தாலம் உணர்வால் தமிழர்களாகவே ஒன்றுபடுகிறோம். அன்றொரு காலத்தில் யாதும் ஊரே யாவும் கேளீர் என்றான் பழந்தமிழன், அப்போது அவன் கால் வைத்த நாடெல்லாம் அவன் காலடியில் இருந்தமையால்.
தொன்மைக் காப்பியம் தொல்காப்பியமும், மெய்யறிவுத் திருநூல் திருமந்திரமும், உலகப்பொதுமறையும், இன்றளவும் வேற்று மொழியில் இலக்கியத்தில் மீளப் படைக்கமுடியாப் பெரும் தமிழ்ப் படைப்பாகும்.

ஆனால் இன்றைய தமிழர் நிலை, அதை நாங்கள் கூறித்தால் உலகத் தமிழர்கள் அறியவேண்டும் என்றில்லை.
இந்தவையில் தனது தாயத்தில் தமிழர்கள் ஒவ்வொரு இடத்திலும் வௌ;வேறு சவால்களுக்கு முகம்கொடுத்தே வாழ்ந்துவருகிறார்கள். வடக்கு, கிழக்கு, மலையகம் தாண்டியும் கணிசமான தொகையில் சுற்றம் பல் இனசமூகமாக அமைந்த இடங்களில் வாழும் தமிழர்கள் எதிர்கொள்ளும் பழுக்கழும் சாவல்களும் தனித்தன்மை கொண்டவை.

இந்தவகையில் ஈழத்திற்கு சென்றிருந்த அருள்ஞானமிகு ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில் அருட்சுனையர் சிவருசி. த. சசிக்குமார் ஐயா அவர்கள் புத்தளத்திலும் சிலாபத்திலும் பல்லின சமூகங்களிடையில் தனித்தீவுகளாக வாழும் பூர்வீக சைவத் தமிழ்மக்களை மட்டக்களப்பு மண்ணின் மைந்தன், இலங்கைப் பாராளுமன்ற உறுப்பினர் மதிப்பிற்குரிய திருநிறை சீனித்தம்பி யோகேஸ்வரன் ஐயா அவர்களுடன் இணைந்து 12. 02. 2017 ஞாயிற்றுக்கிழமை அன்று நேர்கண்டு குறைகேட்டறிந்தார்.

மிகவும் சடுதியாக இயங்கிய யோகேஸ்வரன் ஐயா அவர்கள் சில குறைகளை உடன் தீர்த்து வைத்தார். அம் மக்கள் எதிர்கொண்டுள்ள பல சாவார்களுக்கு உரிய தீர்வுகளையும் முன்வைத்தார்.

கற்பிட்டியைச் சேர்ந்த அன்பர்கள் சைவத்தமிழ் ஒழுகி வாழ சைவநெறிக்கூடத்தின் ஒருகிளையினை அங்கு நிறுவவும் முன்வந்துள்ளார்கள்.

சைவநெறிக்கூடம் உலகில் தமிழர்கள் வாழும் இடங்களெல்லாம் கருவறையில் தெய்வத் தமிழ் திருமறை வழிபாட்டினை முன்னெடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அத்துடன் உலகில் வாழும் அனைத்து தமிழ் மக்களுக்கும் சைவத்தை தமிழை வாழ வழிசெய்வதும் நோக்கமாகும்.

அவ்வகையில் இப்போது சைவநெறிக்கூடம் தன் கையில் எடுத்துள்ள பணிகள் சிறப்புடன் இயங்கத் தொடங்கியதும், தனது மொத்த வலுவையும் மேலான நோக்கில் இயங்க பயன்படுத்தும் என சிவருசி சசிக்குமார் ஐயா தெரிவித்துள்ளார்.

இலங்கையில் பல நிகழ்வுகள் இருக்க, அனைத்தையும் ஒதுக்கிவைத்து, தமிழ்மக்களின் குறைகேட்டு அறிய முன்வந்த யோகேஸ்வரன்
ஐயாவிற்கு தனது நன்றிகளையும் உளமார சைவநெறிக்கூடத்தின் பெயரால் நவிலப்பட்டது.

சிறந்த பாடசாலை அதிபரருக்கான ஜனாதிபதி விருதுகளும் மேலும் பல நல்விருதுகளும் பெற்ற சண்முகநாதன் ஐயா அவர்களும் தனது மதியுரைகளை வழங்கி இப்பிரதேசத்து தமிழ்மக்களின் செழிப்பிற்கு வழிகாட்ட முன்வந்துள்ளார்.

இப்பகுதிகளைச் சேர்ந்த பல இளந்தமிழ் தலைமுறையினர் தமிழ் மெய்யியலும் பண்பாடும் முன்னெடுக்க வந்திருக்கும் இந்நிலை பொன்னான நிலையயென யாவரும் வாழ்த்த இந்நிகழ்வு அமைந்தது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*