பன்முகக் கலைஞர் பரிஸ் இந்திரன் அவர்களுடனான பிரத்தியேக நேர்காணல் (Video)

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

nagalingam-indranathan-paris-france

பிரான்ஸ் நாட்டில் வாழும் ஈழத் தமிழ்க் கலைஞரான இந்திரன் அண்மைக் காலமாக சமூக வலைத்தளங்கள் ஊடகப் பிரபலம் பெற்று வரும் ஒருவர். “அந்த ஆலமரம் நெஞ்சில நிறைஞ்சிருக்கு” என்ற பாடல் ஊடகப் பாடகராக அறிமுகம் ஆகிப் பிரபலம் அடைந்திருந்த அவர், தற்போது தனது நகைச்சுவைப் பேச்சுகள் மூலமாகவும், பாடல்கள் மூலமாவும் சமூக விழிப்புணர்வு காணொளிகளை முகநூல் ஊடகவும் “யூ டியூப்” இணையத் தளம் ஊடாகவும் தொடர்ச்சியாக வெளியிட்டு வருகின்றார். அங்கதம் கலந்த அவரின் பேச்சும், பாடலும் சிந்தைக்கும் சிந்தனைக்கும் விருந்தாக அமைந்து வருகின்றன.

ஏற்கனவே பிரபலம் அடைந்துள்ள அவருக்கு மேலும் பிபலத்தைத் தரும் நோக்கில் அவரின் நேர்காணலை கதிரவன் வாசகர்களுக்கு வழங்குவதில் பெருமை அடைகிறோம்.

சமூக அவலங்களை மக்கள் மன்றத்தில் நிறுத்தும் ஊடகங்களின் பணியையே அவரும் ஆற்றி வருகின்றார் என்ற காரணத்தினால் அவரின் காணொளிகளை கதிரவன் இணையத்தளம் மூலமாகத் தொடர்ச்சியாக வெளிக் கொணர கதிரவன் குழுமம் முடிவு செய்துள்ளது. இதுவரை முகநூலிலும் “யூ டியூப்” இலும் சந்தித்த அவரை நீங்கள் இனிமேல் கதிரவனிலும் காணலாம்.

 

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends


Submit