மீண்டும் ஒரு பதற்றமான சூழலை உருவாக்க த.தே.கூட்டமைப்பு முயற்சி; டக்ளஸ்!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

எமது மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்குத் தமிழ் தேசியக் கூட்டமைப்பானது, பாராளுமன்றத் தெரிவுக் குழுவில் இணைந்து கொள்ள வேண்டுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பகிரங்க அறைகூவல் விடுத்துள்ளார்.

யாழ்ப்பாணம், பொது நூலகத்திற்கு அருகிலுள்ள வளாகத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிறந்த நாளையொட்டி நேற்றைய தினம் (22) ஏற்பாடு செய்யப்பட்ட குடாநாட்டில் வருமானம் குறைந்த குடும்பங்களுக்கும் மாணவர்களுக்கும் வாழ்வாதாரத்திற்கான உதவித் திட்டங்கள் வழங்கும் நிகழ்விலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அமைச்சர் இங்கு மேலும் உரையாற்றும் போது,

கிடைக்கின்ற வாய்ப்புகளை சுயலாபத்திற்காக சுயலாப அரசியல்வாதிகள் பயன்படுத்தியதன் காரணமாகவே, எமது மக்கள் துன்ப, துயரத்தைச் சந்தித்தார்கள். அதுமட்டுமன்றி, மீண்டும் ஒரு பதற்றமான சூழலை உருவாக்கவே தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் மீண்டும் முயற்சித்து வருகின்றார்கள். எதிர்காலத்தில் மக்கள் அதற்கு ஒருபோதும் இடம்கொடுக்க மாட்டார்கள். இது விடயம் தொடர்பில் மக்கள் தற்போது உணரத் தொடங்கியிருக்கின்றார்கள்.

25 வருடங்களின் பின்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் யாழ். தேவி யாழ்ப்பாணத்திற்கு வந்த போது தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் அதனைப் புறக்கணித்திருந்ததுடன், மக்களைப் புறக்கணிக்குமாறும் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் பெரும் திரளான மக்கள் கலந்து கொண்டு அந்நிகழ்வை வெற்றி பெறச் செய்துள்ளனர்.

அதுமட்டுமன்றி, வடக்கு மாகாண சபைக்கென அரசினால் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியை மக்களுக்குச் சென்றடைவதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தடையாக இருக்கின்றார்கள் என்றார்.

13வது திருத்தச் சட்டத்திற்கு அமைவாக எமது மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு உரிய வகையில் தீர்வு காண்பதற்கு பாராளுமன்றத் தெரிவுக் குழுவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் பங்கேற்க வேண்டுமென பகிரங்க அறைகூவலையும் அமைச்சர் இதன்போது விடுத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*