
எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் தெரிவு தொடர்பான பேச்சுவார்த்தைகள் செய்மதி தொலைபேசி ஊடாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேற்கத்தைய நாடு ஒன்றின் தூதரகத்தினால் இந்தப் பேச்சுவார்த்தைகளுக்கு தேவையான செய்மதி தொலைபேசிகள் வழங்கப்பட்டுள்ளன.
இலங்கை அரசாங்கத்தின் உயர் மட்டத்தினர் ஆளும் கட்சியிலிருந்து தாவக் கூடியவர்களை கண்காணித்து வந்த காரணத்தினால், பேச்சுவார்த்தைகள் மிகவும் இரகசியமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களின் தொலைபேசிகள் ஒட்டுக் கேட்கப்படுவதனை தடுக்கும் நோக்கில் இவ்வாறு விசேட செய்மதி தொலைபேசிகளை முன்னாள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட தரப்பினர் பயன்படுத்தியுள்ளனர்.
பொது வேட்பாளர் ஒருவரைத் தெரிவு செய்து, ஆட்சி அதிகாரத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் முயற்சியில் குறித்த தூதரகம் முக்கிய பங்கு வகித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் முன்னாள் மீன்பிடித்துறை அமைச்சர் ராஜித சேனாரட்ன ஆகியோர் ஊடாக பொது வேட்பாளர் தொடர்பிலான பேச்சுவார்த்தைகளும் இணைப்புப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பொது வேட்பாளர் தெரிவு தொடர்பிலான பேச்சுவார்த்தைகளுக்கான பயணங்களை மேற்கொள்ள இலக்கத் தகடு மாற்றப்பட்ட அதி சொகுசு ஜீப் வண்டியொன்றும், மோட்டார் கார் ஒன்றும் பயன்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.