நான் ஒரு மோசடிக்காரன் எஸ்.பி. ஒப்புதல்

பிறப்பு : - இறப்பு :

கடந்த 1999ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது கடுமையான மோசடிகளில் ஈடுபட்டதாக உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க ஊடகங்களில் தெரிவித்துள்ளார். 1999ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் நியாயமான முறையில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க வெற்றியீட்டவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

கடுமையான மோசடிகளில் ஈடுபட்டே சந்திரிக்காவை தாம் வெற்றிபெறச் செய்ததாகக் குறிப்பிட்டுள்ளார். போலியான வாக்குகளைப் போட்டதாகவும், ஜே.வி.பி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்களை தாக்கி விரட்டியதாகத் தெரிவித்துள்ளார். மேலும் வாக்குச் சாவடிகளில் இருந்த அதிகாரிகளை அச்சுறுத்தி விரட்டியடித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

இறந்தவர்கள், வீடுகளில் இல்லாதவர்கள், வெளிநாடு சென்றவர்களின் வாக்குகளை தாமும் தமது ஆதரவார்களும் இணைந்து ஆளும் கட்சிக்காக திரட்டியதாகத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலின் போது மிக மோசமான முறையில் மோசடிகளை செய்தாகவும் நேர்மையான முறையில் தேர்தலில் போட்டியிட்டிருந்தால் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க படு தோல்வியடைந்திருப்பார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, தற்போதைய பொது வேட்பாளரை ஆதரிக்கும் தரப்பினர் ஜனாதிபதி தேர்தலின் பின்னர் ஒருவருக்கு ஒருவர் மன்னிப்பு கோர நேரிடும் என அவர் தெரிவித்துள்ளார். தேர்தலின் பின்னர் இவர்களின் ஆடைகள் கழன்று விழும் எனவும் அவமானப்படுவார்கள் எனவும் எஸ்.பி. திஸாநாயக்க ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ளார்

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit