வவுனியாவில் உண்ணாவிரதம் மேற்கொள்பவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடம்!

பிறப்பு : - இறப்பு :

வவுனியாவில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட 13 இ.போ.ச ஊழியர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இ.போ.ச ஊழியர்கள் மேற்கொண்டு வரும் உண்ணாவிரத போராட்டத்திற்கு அவர்களின் உடல் நிலையை சோதனையிடுவதற்காக சென்ற வவுனியா பொது வைத்தியசாலை வைத்தியர்களே இதனை தெரிவித்துள்ளனர்.

வட மாகாணம் முழுவதும் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் இவ்வேளை இன்றைய தினம் தமது ஆதரவினை வழங்கும் முகமாக யாழ்ப்பாண இ.போ.ச போக்குவரத்து ஊழியர்கள் வவுனியா நகரில் இருந்து உண்ணாவிரதம் இடம்பெறும் வவுனியா இ.போ.ச சாலைக்கு பதாதைகள் ஏந்தியவாறு பேரணியாக நடந்து ஆதரவை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit