ஆரம்பமாகிய மாவீரர் வாரமும் தூசுதட்டப்பட்டு குறிபார்க்கும் துப்பாக்கிகளும்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

நவீனமயமாக்கப்பட்ட இந்த உலகிலே ஈழத்தமிழர்கள் சிந்திய இரத்தமும் அவர்கள் சிந்தியகண்ணீரும் கொஞ்சமல்ல வார்த்தைகளால் வர்நிக்க முடியாத வன்முறைகள் அங்கே!! இன்றும் தலைதூக்கி ஆடுகின்றது சுதந்திரமாக வாழவேண்டும் என்று ஆசைப்பட்ட ஒரே காரணத்துக்காக எவராலுமே எப்போதுமே திருப்பிக்கொடுக்கமுடயாத அளவு இழப்புக்களை சந்தித்துவிட்டும் இன்னும் இரானுவமயமாக்கப்பட்ட ஒரு சர்வாதிகார ஆட்சிக்குள்வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள் உலக அரங்கில் ஈழத்தமிழினத்தை பயங்கரவாதிகளாக சித்தரித்து
தனது படுகொலைகளுக்கு நியாயம் சொல்கின்றது சிங்கள பௌத்த பேரினவாதம்.

எத்தனையோ “புரட்சியாளர்களையும்” எத்தனையோ ‘விடுதலைப்போராட்டங்களையும்’ சந்தித்த உலகம் “சிங்களபௌத்த” பேரினவாதத்தின் போலியான பரப்புரைகளை நம்பி எங்களை “பயங்கரவாதிகளாகவே” பார்க்கத்தொடங்கி பலஆண்டுகள் ஆகின்றது. பார்க்கின்ற பார்வையிலே “கள்ளுக்கும் பாலுக்கும்” உள்ள வேறுபாட்டை உணர முடியாது என்பதை இந்த நாகரீக உலகம் உணரமறுத்தகாரணத்தினாலே! இன்று லட்சக்கணக்காண தமிழர்களின் உறக்கமும் உயிரும் பறிபோனது, ஒரு ‘கட்டெறும்பினை’ கூட கால்களால் நசுக்கும்போது அது கடிக்கத்தான் செய்கின்றது ஒரு சிறிய எறும்பின் உணர்வுகளே! இவ்வாறு இருக்கும்போது ஆறறிவுகொண்ட மனிதர்களாகிய குறிப்பாக தமிழர்களாகிய எமது உணர்வுகள் எப்படி இருக்கும் என்பதை இந்த உலகம் ஏன் இன்றைக்கும் உணர்ந்து கொள்ள மறுக்கின்றது.

பயங்கரவாதம் என்ற சொல்லின் வரைவிலக்கணம் என்ன?? மனித குலத்திற்கே கேடுவிழைவிக்கக்கூடிய “அணுகுண்டையும் ”ஆட்லறியையும்” கண்டறிந்தவனை விஞ்ஞானி என்று சொன்னால் அதிலே வெந்து சாகின்றவனை எப்படி பயங்கரவாதி என்று கூற முடியும்?? உன்மையிலே இன்று எங்களை பயங்கரவாதி என்று யாரெல்லம் குறிப்பிடுகின்றார்களோ
உன்மையில் அவர்கள் தான் உன்மையான பயங்கரவாதிகள், இதை ஆதாரபூர்வமாக நீரூபித்துக்காட்டவும் முடியும் அன்று ஒசாமா பில்லேடன் அமெரிக்காவின் இரட்டைகோபுரத்தை தாக்கியதன் பிற்பாடு அமெரிக்காவின் பார்வை உலகத்தில் சுயநிர்நய உரிமைக்காக போராடுகின்ற அத்தனை போராட்டக்குழுக்கள் மீதும் பயங்கரவாதம் என்ற
சேற்றினை பூசியே பார்க்கத்தொடங்கியது .”நீதி நியாயம் எல்லாம் வல்லோர்கள் வகுத்ததன்றோ” ஆகவேதான் அமெரிக்கவல்லரசின் வாலாட்டும் நாய்களாக உலக நாடுகளும் ஈழத்தமிழனை ஓதுக்கித்தள்ழியது.

உலகத்தில் பயங்கரவாதத்தை யாரெல்லாம் முதலில் அறிமுகம் செய்தார்களோ அவர்கள் ஈழத்தமிழர்களின் போராட்டத்திற்கு பயங்கரவாதம்என்ற பட்டத்தை சூட்டி தாம் எல்லோருமே அகிம்சாவாதிகளாக அடையாளமிட்டுக்கொண்டனர். உதாரணமாக சொல்லப்போனால் அன்றுமுதல் இன்று வரை அகிம்சையின் அடையாளமாக உலக அரங்கிலே தன்னை அடையாளப்படுத்திக்கொண்டிருப்பது இந்தியா இந்த இந்தியாவின் போலி முகத்தையே உலகம் இன்று பார்த்துக்கொண்டிருக்கின்றது, ஆனால் அதன் உன்மையான முகத்தை
அறிந்தவர்கள் ஈழத்தமிழர்கள் மாத்திரமே!! உன்மையில் இன்றைய இந்தியா அகிம்சை என்ற வார்த்தையினை உச்சரிப்பதற்கு கூட தகுதியான நாடா என்பது கேள்விக்குறியே ஆராய்ந்து பார்க்கப்போனால் அகிம்சை என்ற போர்வைக்குள் ஒழிந்து கொண்டு சர்வாதிகாரம் செய்யும் ஒரு நாடு இந்தியாவைப்போல் இன்று உலகில் இல்லை என்றே கூறிக்கொள்ளலாம்,

அன்று முதல் இன்று வரை காந்தியின் பெயரிலே பாரததேசம் எங்கும் ஆட்சிநடைபெறுகின்றது இதில் வேடிக்கை என்னவென்றால் இன்று பயங்கரவாதம் என்று சொல்லும் இந்தியா அன்று அகிம்சைமுறையிலே திலீபன் போராடியபோது அதை கண்டுகொள்ளாது திலீபனின் உயிரை பறித்தது உன்மையில் இது இந்தியாவின் ஒரு வஞ்சகம்
என்றும் சொல்லலாம் காரணம் அகிம்சைக்கே ஆசானக தன்னை அடையாளப்படுத்தும் இந்தியாவிடமே தீலீபனின் அகிம்சைரீதியான போராட்டம் செயலிழந்து போனது என்றால் உலகத்தில் வேறு யாருக்கு எங்கள் நியாயத்தன்மை புரிந்துவிடபோகின்றது.

இன்று பயங்கரவாத ஒழிப்பு என்ற பெயரில் ஈழத்தில் தலைதூக்கும் அரசபயங்கரவாதத்தின் வழிகாட்டியாக எத்தனையோ வல்லரசுகள் திரைமறைவில் உள்ளன என்பதை ஒவ்வெரு தமிழர்களும் நன்கு அறிவார்கள் ஆனால் அன்று 1987 ஆம் ஆன்டு அகிம்சை முறையிலே இளமைதுடிப்பும் நிறைய எதிர்காலமும் உள்ள ஒரு இளைஞனாகிய திலீபன் போரடினார் அவரது அகிம்சையே அவரின் ஆயுதமாகமாறி அவரை கொன்றது .அதே சமயம் 1988 முதுமையும் தளர்வும் மிக்க 10 பிள்ளைகளின் தாயாராகிய அன்னை பூபதி அவர்கள் இந்திய வல்லாதிக்கத்தினை வெளியேறும்படி அகிம்சைரீதியாக உண்ணாவிரதம் இருந்தார் ஆனல் காந்தியின் தேசத்துக்கே காந்தியின் விழியில் செயற்பட பிடிக்கவில்லை இறுதியில் அவருக்கும் அகிம்சையே எமனாகியது, பயங்கரவாதத்திற்கு எதிரான அகிம்சையும் பயங்கரவாதமகவே கருதப்படும் என இச்சம்பவங்கள் ஒவ்வெரு தமிழனுக்கும் ஒரு நல்லபாடம் ஒன்றை கற்றுத்தந்தது.

“ஒருகன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்டு” என்று கூறிய இயேசுபிரானையே சிலுவையில் வைத்து ஆணியால் அறைந்த இந்த உலகில் அகிம்சை என்ற சொல்லே அர்த்தமற்றது கைகளில் இருக்கும் ஆயுதங்களை களைந்துவிட்டு அகிம்சைரீதியாக போராடும்படி எங்கள் வேகத்தடைகளாக நிற்கும் இந்தியாவும் சரி அமெரிக்கா உற்பட மேலைத்தேய நாடுகளும் சரி இன்று “அனுகுண்டுகளை பரீச்சிப்பதும் புதிது புதிதாக ஆயுதங்களையும்” வாங்கி குவிப்பதுமாக உள்ள நோக்கம் என்ன?? “தனக்கு தனக்கு என்றால் சுளகும் படக்கு படக்கு என்று அடிக்குமாம்” வெறும் ஆயிரக்கணக்கண அமெரிக்கர்களை கொலைசெய்த ஒசாமாபில்லேடனை பலவருடங்கள் கழித்து மோப்பம் பிடித்து பாகிஸ்தானிடம் அனுமதிகூட பெற்றுக்கொள்ளாது அமெரிக்கப்படைகள் பலியெடுத்தன உன்மையில் பாரட்டப்படவேண்டிய விடயம். அனால் இலட்சக்கணக்காண மக்களை பலியெடுத்து கோடிக்கணக்கான எமது சொத்துக்களை சூறையாடி எம் சொந்த மண்ணை அபகரித்த இந்த சிங்களபேரினவாதத்தை பழிதீர்த்து எமது மண்ணை மீட்க நாம் ஆயுதங்களை சுமந்த போது எங்களை பயங்கரவாதிகளாக கூறி அதே அமெரிக்காவும் அதன் ஊதுகுழல்களும் எமை தடைசெய்ததன் நோகம் என்ன???

ஆனால் எந்தவிதமான ஒரு எதிர்பார்புக்களும் இன்றி தம் தேசவிடுதலைக்காகவ்வும் தமது அடுத்தசந்ததி தலைநிமிர்ந்து வாழவேண்டும் என்ற நோக்கத்தோடும் உயிர் பிரியும் தருணத்தில்க்கூட உன்மையான வீரர்களாக வீழ்ந்து மடிந்த உத்தமர்களை தீவிரவாதிகள் என்றும் பயங்கரவாதிகள் என்றும் தூற்றுவதை ஒருபோதும் தமிழினம் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை உலக அரங்கில் எங்கே! விடுதலைப்புலிகளிமீதான தடைகள் நீக்கபட்டுவிடுமோ சர்வதேச நாடுகள் அனைத்துமே இவர்களை சுதந்திரப் போராட்டவீரர்களாய் பிரகடனப்படுத்திவிடுமோ என்ற அச்சத்தில் இன்று சிங்களப் பேரினவாதம் உள்ளது .உலகத்தில் விடுதலைப்புலிகள் புனிதர்களாக்கபட்டால் சிறீலங்காவின் அரசபடையினரின் முகமூடிகள் கிழிக்கப்பட்டு அவர்கள் சர்வதேசநீதிமன்றத்தில் நிறுத்தபட்டு போர்குற்றவிசாரணைகளுக்குள்ளாக்கப்பட்டுவிடுவார்கள் எனவேதான் தம்மை தாமே தற்காத்துக்கொள்வதற்காய் அடிக்கடி பயங்கரவாதம் தீவிரவாதம் பிரிவினைவாதம் என்றெல்லாம் கழிவறைக்குப்போனாலும் உச்சரித்தவண்ணமே உள்ளனர் இன்றய சர்வாதிகாரா ஆட்சியாளர்கள் .

ஆயுதத்தினால் எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வுகாண முடியாது. என்ற கூற்று தமிழர்களை பொறுத்தவரை பொய் என்றே கூறலாம். காரணம் மூன்று தசாப்தங்களாக போராடிய ஆயுதங்கள் இன்று உலகத்தில் எமக்கான ஒரு அடையாளத்தை ஏற்படுத்தியது. நாம் தட்டியபோது திறக்காத கதவுகள் எல்லாம் தனாக திறந்தன . நாங்கள் அழைக்காத தலைகள் எல்லாம் எமை திரும்பி பார்த்தன, உன்மையில் பலம் உள்ளவனுக்குதான் இந்த உலகில் இடம் உண்டு என்பதை நாம் பலம் உள்ளவர்களானபோது உணர்ந்து கொண்டோம், வெற்றிக்குமேல் வெற்றி சூடியபோது இந்த கையாலாகாத உலகம் ஓடி வந்து சமரசம் செய்து சமாதானம் பேசியது. இன்று பயங்கர்வாதிகள் என்று கொல்லப்பட்ட தளபதிகளுடன் கைகுலாவிஆயுதம் பிடித்த அவர்கள் கைகளைலே 2002 ஆம் ஆண்டு பேனாவை கொடுத்து பேச்சுவார்த்தைக்கு அழைத்தது ஆனால் அதே தளபதிகளை போராளிகளை மீண்டும் பயங்கரவாதிகளாக்கி அவர்களை கொன்றது இந்த கொடிய உலகு இதை இட்டு ஒட்டுமெத்த மனிதகுலமே வெட்கி தலைகினிய வேண்டும்,
எது எப்படியோ எமது உறவுகள் எமது சொந்த பந்தங்கள் எமது விடுதலைக்காய் போராடிய தியாகிளை நினைவுகூர்வதையும் அவர்களுக்கு அஞ்சலிசெலுத்துவதையும் எவராலுமே தடைசெய்துவிட முடியாது .அழுவதற்கே தடைபேடப்பட்ட தேசத்தில் மீன்டும் ஒரு சந்ததியினர் வன்முறையாளர்களாய் மாறுவதை இன்றய ஆட்சியாளர்கள் தடுத்து நிறுத்தமுடியாது சிங்கள தேசத்துக்கு வேண்டுமானால் எங்கள் மாவீரர்கள் பயங்கரவாதிகாய் தெரியட்டும் அவர்கள் எங்கள் ஈழமன்னின் புதல்வர்கள் ஈழமண்ணிலே தூவப்பட்ட வீரவித்துக்கள்
ஆராதிப்போம் கண்ணீரால் நீராட்டுவோம் அவலக்குரலிட்டு ஐம்பூதங்களுடனும் ஐக்கியமாகிப்போன அவர்களுக்கு நன்றிக்கடன் செய்வோம்.

இன்று பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டதாம் விடுதலைப்புலிகள் அழிக்கப்பட்டார்களாம் என்றெல்லாம் வெற்றிவேட்டுக்களைவானில் ஏவி வாய்கிழிய கூச்சலிட்டு கும்மாளம்போட்டர்கள். ஆனால் இன்னமும் இந்த பயங்கரவாத பட்டமும் விடுதலை உணர்வுள்ள ஒவ்வெரு தமிழனையும் விடுவதாக இல்லை, தன் இனவிடுதலைக்காய் போராடுகின்ற அத்தனை தமிழர்களும் பயங்கராவாதிகளே!! இந்த பயங்கரவாதம் இன்னும் தொடரும் எனது விடுதலைக்காய் விழித்திருக்கும் நாமும் எமது இனமும் பயங்கரவாதி என்று அழைக்கப்படுவதால் பெருமையடைகின்றேம் பயங்கரவாதிகள் வாழும் தேசத்தில் நாமும் பயங்கரவாதிகளே!! காரணம் விலங்குகள் வாழும் காட்டிலே மனிதர்களாய் வாழ்வது என்பது கடினம், எனவே பயங்கரவாதிகள் வாழும் இந்த உலகிலே நாமும் என் இனமும் பயங்காரவாதிகளாக வாழ்வதை நினைத்து பெருமிதம் கொள்வோம். ஆனால் எமது காவல்தெய்வங்களகவும் எமது முதுகெலும்பாகவும் ஈழவானத்தின் விடிவெள்ளிகளாகவும் மண்மானம் காத்த எங்கள் மாவீரர்களை பயங்கரவாதிகள் என்று இந்த உலகமும் சிங்களப்பேரினவாதமும் சொல்வதை அனுமதிக்கமுடியாது.

எங்கள் சொந்தங்களுக்காக எங்கள் காவல்தெய்வங்கழுக்காக நாங்கள் விடும் கண்ணீரும் கோயில்களில் ஒலிக்கப்படும் மணியோசையும் ஏற்றப்படும் ஒரு தீபமும்சிங்களப்பேரினவாதத்தின் ஒருமைப்பாட்டிற்கும் கேடுவிளைவிற்கும் என்றால் இன்று மிகவும் அண்மித்த நாட்களில் வலிவடக்கில் இடம்பெறும் வீடழிப்பு முல்லைத்தீவுநாவற்குழி கொக்கிளாய் போன்ற பகுதிகளில் இடம்பெறும் நில அபகரிப்பும் ஒருமைப்பாட்டினையும் இன நல்லிணக்கத்தையும் ஏற்படுத்திவிடுமா?
வென்றோம் வென்றோம் என்று ஒவ்வொரு மே பதினெட்டுகளிலும் நீங்கள் துப்பாக்கிவேட்டுகளை வான் நோக்கி ஏவி போர் வெற்றிவிழாக்கொண்டாடுவது எங்கள்காதுகளில் உங்கள் பிள்ளைகளை நாங்கள்தான் கொன்றோம் கொன்றோம் என்று ஒலிக்கின்றது உங்கள் அம்மா அப்பா அக்கா தம்பி என்று அனைவரையும் நாங்களேகொன்றோம்கொன்றோம் என்று ஒலிக்கின்றது இது மட்டும் எவ்வாறு ஒருமைப்பாட்டைக்கட்டியெழுப்பிவிடும்.

தமிழினத்தை அடிமைப்படுத்தி அடக்கியாள சிங்களமேலாதிக்கம் முன்வைக்கும் போலியானகுற்றச்சாட்டுகளும் பொய்யான பரப்புரைகளும் இன்னமும் எத்தனை
காலம் அவர்களை காப்பாற்றப்போகின்றது ?அடக்குமுறையும் கட்டவிழ்த்துவிடப்பட்ட அதிகாரமும் தமிழ்மக்களை இன்னும் என்ன செய்துவிடமுடியும் ஒரு விடுதலைக்காக போராடி அதற்காக இதுவரைக்கும் தமிழர்கள் இழந்த இழப்புக்கைளைவிட இனி என்ன வந்துவிடப்போகின்றது எத்தனை இராணுவங்கள் வந்தாலும் பல சட்டதிட்டங்களைப் போட்டாலும் சத்தியத்தின் வழியிலே போராடும் எந்த ஒரு இனத்தையும் எந்த ஒரு சக்தியாலும் நிரந்தரமாக அழித்துவிடவோ அடக்கிவிடவோ முடியாது.

மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டாலும் பறவாயில்லை மாவீரர்நாள் அன்று ஒரு சிறிய தீபத்தினை யாரும் ஏற்றிவிடக்கூடாது என்பதற்காக பல்கலைக்களகத்தினையே மூடி மாணவசமூகத்திற்கே சவால் விடும் மதிகெட்ட ஆட்சிபீடம் இந்த ஆயுதப்போராட்டம் ஆரம்பிக்கப்பட்டதே இந்த மாணவர்கள்தான் என்பதையும் தமிழ்மாணவர்களின் கல்விச்செயற்பாடுகளில் சிங்களமேலாதிக்கவாதிகள் தலையிட்டு தமிழ்மாணவர்கள் ஒதுக்கப்பட்டதன் விழைவுதான் இந்த ஆயுதப்போராட்டம் உலகமே வியக்கும் அளவு வளர்ச்சி பெற்றது .எனவே சக்திமிக்க மாணவசமூகத்துடன் மல்லுக்கட்டிக்கொண்டு நிற்கும் மதிகெட்ட அரசு அதன் விளைவுகளை நிச்சயம் சந்திக்கும்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*