நீண்ட நாட்கள் வெள்ளைப்படுதல் பிரச்சனையா?

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

ஒவ்வொரு பெண்களும் தங்களின் மாதவிடாய் சுழற்சி நெருங்கும் காலத்தில் அனுபவிக்கும் ஒரு பிரச்சனை தான் வெள்ளைப்படுதல்.

அதுவே இந்த வெள்ளைப்படுதல் பிரச்சனைகள் நீண்ட நாட்கள் தொடர்ந்தால், பெண்களின் இனப்பெருக்க உறுப்பு மிகுந்த பாதிப்பிற்கு உள்ளாகும்.

பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் பிரச்சனையைக் குணப்படுத்த ஆயுர்வேதத்தில் இருக்கும் அருமையான நிரந்தர தீர்வுகள் இதோ!

நீண்ட நாட்கள் வெள்ளைப்படுதல் ஏற்பட என்ன காரணம்?

பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் பிரச்சனைகள் பல்வேறு காரணங்கள் மூலம் ஏற்படுகிறது.

முக்கியமாக பெண்களின் வெள்ளைப்படுதலுக்கு ஹார்மோன்களின் ஏற்றத்தாழ்வுகள், மன அழுத்தம், அதிகப்படியான ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன், நோய்த்தொற்றுகள், செரிமான பிரச்சனைகள், மோசமான டயட், இரும்புச்சத்துக் குறைபாடு இது போன்ற பல்வேறு காரணங்கள் உள்ளது.

வெள்ளைப்படுத்தல் பிரச்சனையை போக்கும் ஆயுர்வேத மருத்துவங்கள்
  • அமரந்த் கீரையை நீரில் போட்டு சிறிது நேரம் நன்கு கொதிக்க வைத்து, பின் அதனை வடிகட்டி, வெதுவெதுப்பான நிலையில் அந்த நீரை பருக வேண்டும்.
  • உலர்ந்த நெல்லிக்காயின் விதைகளை பொடி செய்து, அதை மோருடன் கலந்து தினமும் இரண்டு வேளைகள் அதை குடித்து வந்தால், விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.
  • நெல்லிக்காயை பொடி செய்து, அதை சிறிதளவு தேனில் கலந்து தினமும் இரண்டு வேளைகள் அதை குடித்து வந்தால், வெள்ளைபடுத்தல் பிரச்சனைக்கு விரைவில் ஒரு நல்ல தீர்வைக் காணலாம்.
  • வெந்தம் பெண்களின் வெள்ளைப்படுதல் பிரச்சனைக்கு ஒரு நல்ல தீர்வாக உள்ளது. எனவே 2 டீஸ்பூன் வெந்தயத்தை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்நீரை வடிகட்டி குளிர்ந்ததும், அதனைக் கொண்டு யோனிப் பகுதியை சுத்தம் செய்ய வேண்டும்.
  • பெண்கள் தினமும் ஒரு வாழைப்பழத்தை சாப்பிட்டு வந்தால், வெள்ளைப்படுதல் பிரச்சனையில் இருந்து விடுபடலாம். அல்லது வாழைப்பழத்தை நெய் சேர்த்து 1 நிமிடம் வதக்கி கூட தினமும் சாப்பிட்டு வரலாம்.
http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*