காவல்துறை வன்முறைக்கு எதிரான கண்டனப் பொதுக்கூட்டம் – தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

காவல்துறை நமது நண்பன் என்று இனி யாருமே நாக்கூசாமல் சொல்ல முடியாது. காவலர்கள் ஆளும் கும்பலின் தற்குறித்தனமான அடியாட்கள் என்பது மீண்டும் ஒரு முறை நிரூபணமாகியுள்ளது. சனவரி 23 அன்று மெரினாவில் குறிப்பாக நமது குப்பங்களில் நடந்தவை அதற்கான ரத்த சாட்சியங்கள். இன்று உலகம் அறிந்தவை.

மெரினாவில் மக்கள் சல்லிக்கட்டுக்குச் சட்டம் கேட்கிறார்கள். சட்ட நகலைக் காட்டாமல் வெறும் தாளை நீட்டிப் போராட்டத்தை நிறுத்தச் சொன்னது காவல்துறை. களைவதற்கு 2 மணிநேர அவகாசம் கேட்டும் அதையும் மறுத்துவிட்டார்கள். அத்தனை நாட்கள் அதற்காகவே வெயில், பனியில் போராடியவர்களைத் தீர்வு நிச்சயமில்லாது முடித்துக் கொள்ளச் சொன்னது மட்டுமல்ல தீர்வுச் சட்டம் குறித்த நம்பிக்கையை ஏற்படுத்தவும் காவல்துறை எந்த முயற்சியும் செய்யவில்லை. போராட்டத்தின் முடிவு கண்ணியமாக அமையாததற்குக் காவல்துறையும் தமிழக அரசுமே முழுப் பொறுப்பு.

அப்படியானால் அதன்பின் நடைபெற்ற மக்கள் மீதான கொலை வெறித் தாக்குதல், காவல்நிலைய எரிப்பு எல்லாமுமே காவல்துறையின் வன்முறையே! கலவரத்தைத் தடுக்கிறோம் என்கிறீர்கள்; பின் எதற்காக வாகனங்களை அடித்து உடைத்தீர்கள், தீயிட்டுக் கொளுத்தினீர்கள். அந்த வாகனங்களும் எழுந்து வந்து கலவரம் செய்திருக்கும் போலிருக்கிறது. தாழ்ப்பாள் போட்டு வீட்டுக்குள் ஆதித்யாவில் நகைச்சுவை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தவரை கதவுடைத்து இழுத்துப் போட்டு கைகால் உடைத்தீர்களே இது எந்த சட்டவிதியின் படி நடந்தது. அந்த மக்கள் என்ன கலவரம் செய்தார்கள்.

ஜார்ஜ் சொல்கிறார் சமூக விரோதிகள் புகுந்துவிட்டார்கள் என்று. அவரேதான் இப்போது காவல்துறை கலவரம் செய்த காட்சிகளை வெளியிடாதீர்கள் என்று மக்களை மிரட்டுகிறார். இவர்களெல்லாம் காவலர்கள் இல்லை நீண்ட பயிற்சியும் அனுபவமும் பெற்ற குற்றக் கும்பல் என்பதே அவர் அறிவிப்பின் பொருள்.

kandan-urai

பாஸ்பரஸ் போட்டு மீன் கடைகள் எரிக்கப்பட்டது எவ்வளவு பெரிய குற்றச் செயல். இவை எல்லாவற்றுக்கும் நீதி வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வேண்டும். மீன் சந்தை புதிதாகக் கட்டித் தரப்பட வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக எங்கள் தரப்பில் நூற்றுக்கும் மேற்பட்டோர் சிறையில் உள்ளார்கள். ஒரு காவலர் மீதும் இன்று வரை ஒரு வழக்கு கூட இல்லை. அவர்கள் கூண்டிலேற்றப்பட்டு சிறையில் அடைக்கப்பட வேண்டும்.

மீனவ மக்களும் தலித் மக்களும் கைவிடப்பட்டவர்கள் இல்லை. அவர்களுக்காக நாங்கள் உள்ளோம். நீதிக்கான போராட்டத்தில் அனைவரும் கைகோர்த்து ஒன்றுபடுவோம். கூட்டம் நடைபெறும் அம்பேத்கர் பாலம் மக்களால் நிறைவது அதற்கான தொடக்கமாய் இருக்கட்டும்.

உரை: தோழர் தியாகு, சு.ப.உதயகுமாரன், இயக்குனர் ராம், பேராசிரியர் மு.திருமாவளவன்

உடன் வன்முறைக்கு ஆளான மக்கள் உரை

29.01.2017, ஞாயிறு, மாலை 5 மணி, அம்பேத்கர் பாலம், மயிலாப்பூர், சென்னை

9865107107

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*