நல்லவேளை இடுப்போடு போச்சி…. இல்லைன்னா…?

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

இருட்டு உலகை பற்றி முரட்டு படங்கள் எடுத்த தெலுங்கு கம் இந்திப்பட இயக்குனர் சத்யவானின் மனைவி பெயரில் தெலுங்கில் ஒரு படத்தை தொடங்கியதும், ஆசிரியர், மாணவன் தப்புத்தாளங்களைப் பற்றிய அந்தப் படத்துக்கு எதிர்ப்பு கிளம்பியதும் அறிந்ததே.

சத்யவானின் மனைவி பெயரை வேறொருவர் பதிவு செய்திருந்ததால் தனது படத்துக்கு மயிலு நடிகையின் பெயரை வைத்தார். சத்யவான் பெயருடன் அவர் வெளியிட்ட புகைப்படங்களில் ஆசிரியையின் வெண்ணைய் இடுப்பை நீங்கள் பார்த்திருக்கலாம். அந்த வெண்ணைக்கு சொந்தக்காரர் கவுரவமான பூனம் நடிகை. போஸ்டர் வெளியாகி மகளிர் அமைப்புகள் இயக்குனரை துவைக்க ஆரம்பித்ததும், அடடா அவசப்பட்டு இடுப்பை காட்டிட்டோமே என்று அந்தப் படத்திலிருந்து சொல்லாமல் கொள்ளாமல் ஓடியே வந்துவிட்டார் கவுரவமான பூனம்.

மயிலு நடிகையின் பெயரை படத்துக்கு வைத்தபின் அதே இடுப்பு போஸ்டரை மீண்டும் இயக்குனர் வெளியிட்டார். அதில் வெண்ணையின் வளவளப்பு கம்மி. கவுரவமான பூனம் ஓடிப்போனதால் அவருக்குப் பதில் மாடல் ஒருவரை இயக்குனர் ஒப்பந்தம் செய்தார். மயிலு பெயருடன் வெளியிடப்பட்ட போஸ்டரில் நீங்கள் பார்ப்பது அந்த மாடலின் இடையை. அதனால்தான் அந்த வேற்றுமை.

நல்லவேளை இடுப்போடு போச்சு, இல்லைன்னா என்று நிம்மதி பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கிறார் பூனம்.

http://www.kathiravan.com/?page_id=1302

One comment

  1. Get More Than 20000 Likes on Photos,pictures,album and Pages Visit http://www.Foxliker*Net

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*