ஆயிரக் கணக்கான தனியார் வெப்கேம்களைத் திருடி வெளியிட்ட ரஷ்ய இணையத் தளம்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

சமீபத்தில் ரஷ்யாவைத் தளமாகக் கொண்ட புதிய இணையத் தளம் ஒன்று உலகம் முழுதும் இருந்து முக்கியமாக அமெரிக்கா மற்றும் மேற்கு ஐரோப்பா இலிருந்து ஆயிரக் கணக்கான தனியார் வெப்கேம்களைத் திருடி நேரடியாக ஒளிபரப்பு செய்துள்ளது.

இவ்வாறு திருடப் பட்ட வேப்கேம்களில் கைக்குழந்தையில் இருந்து வைத்திய சாலையிலுள்ள நோயாளிகள் வரை வீடியோ காட்சிகள் ஒளிபரப்பு செய்யப் பட்டுள்ளன.

இவ்வாறு வீடியோக் காட்சிகள் திருடப் பட்டது குறித்த இடங்களிலுள்ள CCTV கமெராக்கள் மற்றும் வெப்கேம்களின் பாதுகாப்பிலுள்ள பலவீனத்தையே காட்டுகின்றது என்று தெரிவிக்கப் படுகின்றது. இந்நிலையில் குறித்த ரஷ்ய இணையத் தளத்தின் ஹேக்கர்கள் இந்த கமெராக்களை கையாள்வது தொடர்பில் அதன் தயாரிப்பாளர்கள் பயன்படுத்திய கடவுச் சொற்களைத் திருடியே இக்குற்றத்தை இழைத்திருப்பதாக பிரிட்டன் அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்துள்ளனர். மேலும் இந்த லாக் விபரங்கள் ஆன்லைனில் இலவசமாகப் பெறக் கூடிய விதத்தில் இருப்பதால் இந்த பாதுகாப்பற்ற கமெராக்களின் வீடியோக்களை எவர் வேண்டுமென்றாலும் பயன்படுத்தும் சூழ்நிலை உள்ளது.

மேலும் குறித்த ரஷ்ய இணையத் தளத்தில் அமெரிக்காவில் இருந்து 4600 கமெராக்களும், பிரான்சில் இருந்து 2000 கமெராக்களையும், நெதர்லாந்தில் இருந்து 1500 கமெராக்களையும் இதை விட உலகின் ஏனைய 100 நாடுகளில் இருந்து 1000 கமெராக்களும் ஹேக் செய்யப் பட்டு வீடியோக்கள் திருடப் பட்டுள்ளன. இந்நிலையில் பிரிட்டனின் தகவல் தொடர்பு கமிசன் அலுவலகம் உலகம் முழுதும் வேப்கேம்கள் பயன்படுத்துபவர்கள் தமது default கடவுச் சொற்களை மாற்றுமாறு அறிவுறுத்தியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*