சுவிஸ்-பாசல் செந்தமிழ்ச் சோலையின் 4ஆவது முத்தமிழ் விழா (Photos & Videos)

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

சுவிற்சர்லாந்து நாட்டின் பாசல் மாநிலத்தில் இருந்து செயற்பட்டுவரும் தொண்டு நிறுவனமான செந்தமிழ்ச் சோலை அமைப்பின் முத்தமிழ் விழா சனிக்கிழமை (21.01.) பாசல் பிறற்ரல்ன் நகரில் சிறப்பாக நடைபெற்றது. அமைப்பின் தலைவர் செல்வராஜன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வடக்கு மாகாணசபையின் அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டார். சிறப்பு விருந்தினர்களாக ஊடகவியலாளர் சண் தவராஜா, “அழகு தமிழ் அறிவிப்பாளர்“ சுரேஸ், ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் கவிதை, சங்கமம் இசைக் குழுவினரின் மெல்லிசைக் கச்சேரி, நடனம், நாடகம், பட்டி மன்றம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் இடம்பெற்றன. செந்தமிழ்ச் சோலை நிறுவனத்தின் உதவித் திட்டங்களை விளக்கும் காணொளிகளும் காட்சிப்படுத்தப் பட்டன. நிகழ்ச்சிகளை சுவிஸ் நாட்டின் பிரபல அறிவிப்பாளர்களுள் ஒருவரான லக்ஸ்மன் தொகுத்து வழங்கினார்.

நான்கு வருடங்களாகச் செயற்பட்டுவரும் செந்தமிழ்ச்சோலை நிறுவனம் தாயகத்தின் 8 மாவட்டங்களிலும் 80 க்கும் மேற்பட்ட பாடசாலை மற்றும் பல்கலைக் கழக மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக உதவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

muthamil-vizha-tamil-culture-festival-in-basel-switzerland-2017-4

muthamil-vizha-tamil-culture-festival-in-basel-switzerland-2017-6

muthamil-vizha-tamil-culture-festival-in-basel-switzerland-2017-5

muthamil-vizha-tamil-culture-festival-in-basel-switzerland-2017-3

muthamil-vizha-tamil-culture-festival-in-basel-switzerland-2017-1 muthamil-vizha-tamil-culture-festival-in-basel-switzerland-2017-2

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*