கையும் களவுமாக சிக்கிய பிரபல நடிகை ! ரஜினி, கமலுக்கு ஜோடி!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

தமிழ் சினிமாவின் முக்கிய இரட்டை நடிகர்கள் ரஜினிகாந்த், கமலுடன் என்பது பலருக்கும் நன்கு தெரியும். பல நடிகைகள் இவர்களது படத்தில் நடித்து பிரபலமடைந்துள்ளனர்.

அதுபோல இயக்குனர் பாரதிராஜா சினி உலகத்துக்கு அறிமுகப்படுத்தியவர்களும் மிக புகழ் பெற்றிருக்கிறார்கள். அவரின் இயக்கத்தில் புதியவார்ப்புகள் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ரதி.

ரஜினி, கமலுடன் சேர்ந்து உல்லாச பறவைகள், நிறம் மாறாத பூங்கள், கழுகு, முரட்டுக்காளை என பல படங்களில் நடித்துவந்தார்.

மார்க்கெட் குறைய ஹிந்தி சினிமாவுக்கு நடையை காட்டினார் அவர். ரதி அக்னிகோத்ரியாக பாலிவுட்டில் பல படங்களில் நடித்து வந்தவர் அங்கு தொழில் அதிபர் அணில் விர்வானியை திருமணம் செய்துகொண்டு மும்பையில் செட்டிலாகிவிட்டார்.

தற்போது அவர் தன் வீட்டில் சட்ட விரோதமாக மின்சாரத்தை திருட்டுத்தனமாக பயன் படுத்துவதாக வந்த புகாரை அடுத்து அதிகாரிகள் அவர் வீட்டை திடீர் ஆய்வு செய்தனர்.

அப்போது அந்நடிகை தனது வீட்டில் ரீடிங் மீட்டர்களை இயங்க செய்யாமலாமலே 3 ஆண்டுகள் மின்சாரத்தை பயன்படுத்தியது அப்பட்டமாக தெரிந்துள்ளது. இவர் உபயோகப்படுத்திய மின்சாரத்தின் யூனிட்டின் மொத்த மதிப்பு 49 லட்ச ரூபாயாம்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*